Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்கள், புது ஜெர்சியுடன் இருக்கும் புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் நாளை தொடங்கும் நிலையில், இந்திய அணி வீரர்கள் புது ஜெர்சியுடன் இருக்கும் புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடும் இந்திய அணி விவரம்
பாகிஸ்தானில் முதன் முறையாக நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் நாளை கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டி, பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள், அவர்களது புதிய ஜெர்சிக்களுடன் இருப்பதுபோல் நடத்தப்பட்ட ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த தொடரில் பும்ரா விளையாடாத நிலையில், அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறார்.
இதேபோல், ஏற்கனவே இந்திய அணியில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த யஸஸ்வி ஜெய்ஷ்வாலுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி விளையாடுகிறார்.
இவர்களுடன் சேர்த்து இந்திய அணியில், கேப்டன் ரோஹித் ஷர்மா, துணை கேப்டன் சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், விக்கெட் கீப்பர்களான கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி இளம் வீரர்களுடன் நல்ல ஃபார்மில் இருப்பதால், சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

