மேலும் அறிய
“மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஆடு வெட்டப்பட்டதா?” உண்மை என்ன ?
சமயகருப்பன், சங்கிலிக் கருப்பன் சாமியை வைத்து அருள்வாக்கு சொல்லும் நபருக்கு வேண்டுதல் நிறைவேறியதற்காக ஒருவர் இரு ஆடுகளை தந்ததும், அதனை அன்னதானத்திற்கு பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
Source : meenakshi-temple website
மீனாட்சியம்மன் கோயில் அருகே ஆடு வெட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவரும் சூழலில் இது குறித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்சியாக மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி சர்ச்சை
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாகவே உள்ளது. மதநல்லிணக்கத்தின் அடையாளமாக போற்றப்படும் இந்த மலை, இன்று மதத்தின் அடிப்படையில் பிரிவினையை தூண்டுவதற்கான கருவியாக பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அச்சம் தெரிவிக்கின்றனர். அதேநேரம், திருப்பரங்குன்றம் மலையை மையப்படுத்தி பிரச்னை எழுவது என்பது இது முதல்முறையல்ல. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே இந்த பிரச்னை எழுந்தது. உள்நாட்டு விசாரணையை தாண்டி, பிரிட்டிஷ் ஆட்சியின் தலைமை விசாரணப்பிரிவாக கருதப்படும் பிரிவி அமைப்பு இதுதொடர்பான விசாரணையை நடத்தி தீர்ப்பளித்தது. திருப்பரங்குன்றம் மலையை சுற்றி சர்ச்சைகள் பரவி வரும் சூழலில் தற்போது மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
மீனாட்சியம்மன் கோயில்
பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மதுரை மாநகர் நிர்மாணிக்கப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயில் அருகே ஆடு வெட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவரும் சூழலில் இது குறித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆடு வெட்டும் காட்சி
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி நான்கு திசைகளிலும் கோபுரங்கல் உள்ளனர். இதில் கிழக்கு கோபுரம் வழியாக அதிகளவு பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த சூழலில் மீனாட்சியம்மன் கோயில் மேற்கு கோபுரம் எதிரே சுமார் 120 மீட்டர் தூரத்தில் கட்டடம் ஒன்றில் ஆட்டுக் கிடாய் பலியிட்டு கறிக்காக உரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவியது. இது தொடர்பாக மதுரை மாநகர் காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.
போலீஸ் விசாரணை
வீடியோ வைரலானதால் கோயில் புனிதத்தை காக்கும் வகையில் கோபுரம் எதிரே இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் இது தொடர்பாக புகார் அளித்தார். இது குறித்து போலீஸ் விசாரணையில், மேலக்கோபுரம் வீதியில் உள்ள ஒரு சந்தில் சமயகருப்பன், சங்கிலி கருப்பன் சாமியை வைத்து அருள்வாக்கு சொல்லும் நபருக்கு வேண்டுதல் நிறைவேறியதற்காக ஒருவர் இரு ஆடுகளை தந்தது தெரிந்தது. அதை பலியிட்டு அன்னதானம் வழங்குவதற்காக கறி வெட்டியதாக அந்நபர் தெரிவித்துள்ளார். அவரிடம் தற்போதைய சூழலில் கோயில் பகுதியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என போலீசார் கூற, தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தாகவும் தற்போது தகவல் வெளியாகி வருகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில்..,” மதுரை பாண்டிக்கோயில், அழகர்கோயில் என எல்லா முக்கிய ஸ்தலங்களில் ஆடு வெட்டப்படுகிறது. அந்த வகையில் காவல் தெய்வத்திற்கு ஒரு கோயில் அருகில் ஆடு வெட்டியுள்ளார். மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் இது நடைபெறவில்லை, எனவே இதை சர்ச்சையாக்க வேண்டாம்” எனவும் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக அவரவர மத பழக்க வழக்கங்களை கடைபிடித்து வரும் மதுரையில் தேவையில்லாத சர்ச்சைகள் தொடர்பான விவகாரங்களை பகிர்வதோ அதை பூதாகரமாக்க முயற்சிப்பதோ தேவையில்லாத பிரச்னையை உருவாக்கும் என்பதை புரிந்து எப்போதும் போல மத நல்லிணக்கத்தோடு மதுரை மக்கள் இருக்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இதைப்படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion