விழுப்புரம் அருகே ஆட்டை கடித்த நாய்... தகராறில் 2 பெண்கள் கைது
ஆட்டை நாய் கடித்ததால் ஏற்பட்ட தகராறில் 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
![விழுப்புரம் அருகே ஆட்டை கடித்த நாய்... தகராறில் 2 பெண்கள் கைது 2 women arrested in dispute over dog bite near Villupuram TNN விழுப்புரம் அருகே ஆட்டை கடித்த நாய்... தகராறில் 2 பெண்கள் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/5b93cb35b5e3f31b86c65d735e49504c1692412838522113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம்: ஆட்டை நாய் கடித்ததால் ஏற்பட்ட தகராறில் 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே சத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் மனைவி மஞ்சு (35). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் நாகப்பன் மனைவி கஸ்தூரி (42). இந்த நிலையில் கஸ்தூரி வளர்த்து வரும் ஆடு, மஞ்சு வீட்டு தோட்டத்தில் மேய்ந்த போது அந்த ஆட்டை மஞ்சு வளர்த்து வரும் நாய் கடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு ஒருவரையொருவர் திட்டி கொண்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் தாக்கிகொண்டனர். இது குறித்து இரு தரப்பினரும் காணை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஸ்தூரி, மஞ்சு ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஆட்டை நாய் கடித்ததால் ஏற்பட்ட தகராறில் 2 பெண்களை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்
துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)