Trichy Power Shutdown: நாளை திருச்சியில் மின் தடை! முக்கிய பகுதிகள் இதோ! மின்வாரியம் அறிவிப்பு
Trichy Power Shutdown 10.06.2025: கே.சாத்தனூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் மற்றும் 11கே.வி பொன்மலைப்பட்டி மின்பாதைகளில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

Trichy Power Shutdown: திருச்சியில் நாளை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடைங்க. அதனால கவனமுங்க. வாட்டர் டேங்க் நிரம்பிடுங்க. காலையிலேயே சீக்கிரமா சமையலுக்கு அரைப்பதை அரைச்சுங்கோங்க.
திருச்சி, 110/11 கி.வோ கே.சாத்தனூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் மற்றும் 11கே.வி பொன்மலைப்பட்டி மின்பாதைகளில் நாளை 10.06.2024 செவ்வாய்க்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதனால் நாளை காலை 9 மணி முதல் முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
இதன்படி காந்திநகர், புவனேஸ்வரி நகர், ஆர்எஸ்புரம், ஆர்விஎஸ் நகர், முஹம்மது நகர், ஜே.கே.நகர், ராஜகணபதி நகர், டிஎஸ்என் அவென்யூ, பாரதி நகர், டிஆர்பி நகர், திலகர் நகர், இளங்கோ தெரு, வயர்லெஸ் சாலை, பெரியார் தெரு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகவலை திருச்சி மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.





















