மேலும் அறிய

Chennai Budget 2025: சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?

சென்னை பெருநகர மாநகராட்சியின் 2025-26-க்கான பட்ஜெட்டை, மேயர் பிரியா தாக்கல் செய்துள்ளார். அதில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

சென்னை பெருநகர மாநகராட்சியின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட், சென்னை மேயர் பிரியாவால் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இளைஞர்களுக்கான விளையாட்டு மேம்பாடு, குழந்தைகளை கவரும் பூங்கா மேம்பாடு என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஹைலைட்டான அறிவிப்புகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

  • மாநகராட்சிக்குட்பட்ட 300 பூங்காக்களை பழுது பார்த்து மேம்படுத்த ரூ.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • மேம்பாலங்கள், ரயில்வே மேம்பாலங்களின் கீழ் பகுதியை உகந்த முறையில் அழகுபடுத்த ரூ.42 கோடி.
  • சென்னை பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பில் ஆர்வமுள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து, போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்ய ஊக்கத் தொகை வழங்க, ரூ.40.5 கோடி ஒதுக்கீடு.
  • பெருநகர சென்னை மாநராட்சியில், 200 பதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு.
  • 10 மண்டலங்களில் 10 மெட்ரிக் டன் திறன் கொண்ட நெகிழி சிப்பமாக்கல் மையங்கள் அமைக்க ரூ.22.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற ஏதுவாக, மாநகராட்சிக்குட்பட்ட 150 விளையாட்டுத் திடல்களில், விளையாட்டு உபகரணங்கள் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு.
  • சாலை மைய தடுப்புகள் மற்றும் சாலை மைய தீவுத் திட்டுகளை அழகுபடுத்த, முதற்கட்டமாக 25 கி.மீ நீளத்திற்கு உரமிடுதல், அலங்காரப் பூச்செடிகள், துருப்பிடிக்காத இரும்புக் கைப்பிடி அமைக்க ரூ.18 கோடி.
  • சென்னை மணலி, ஐஓசில், டோல்கேட், சாலிகிராமம் பேருந்து முனையங்களை மேம்படுத்த ரூ.16 கோடி.
  • மாநகராட்சியின் அனைத்து மயான பூமிகளிலும் உள்ள தகன மேடைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த ரூ.15 கோடி.
  • 18 இடங்களில் உள்ள வாகன போக்குவரத்து சுரங்கப்பாதைகளை அழகுபடுத்த மற்றும் மழைநீரை அகற்ற மோட்டார்கள், ஜெனரேட்டர்கள் அமைக்க 14.4 கோடி.
  • பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில், காற்று புகும் வகையில் பதனம் செய்யும் உரம் தயாரிக்கும், 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 கூடங்கள் அமைக்க ரூ.14 கோடி.
  • சாலைகளில் மண், குப்பைகளை உறிஞ்சியெடுத்து சுத்தம் செய்யும் 20 வாகனங்கள் வாங்க ரூ.8 கோடி.
  • மகளிர் சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில், 15 மண்டலங்களில் தலா ஒரு மையம் அமைக்க ரூ.7.5 கோடி ஒதுக்கீடு.
  • மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் 10 இடங்களை தேர்வு செய்து மின்னொளியுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள் அமைக்க ரூ.5 கோடி.
  • 171 விளையாட்டுத் திடல்களில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பாதுகாவலர்களை பணியமர்த்த ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • புதிதான கட்டப்பட்டுள்ள 22 மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் மின்தூக்கி (Lift) வசதிகள் ஏற்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு.
  • பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் வழங்க வாட்ஸ்அப் அடிப்படையிலான தகவல் தொடர்புகளை உருவாக்க ரூ.4.46 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 52 சென்னை உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஜெனரேட்டர் அமைக்க ரூ.4.7 கோடி.
  • மாநகராட்சியின் அனைத்த சுகாதார நிலையங்களில் உள்ள மருந்து காப்பகங்களுக்கு ஏசி வசதிகள் செய்ய ரூ.3 கோடி ஒதுக்கீடு.
  • மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 100 பள்ளிகளில் செயல்படும் மழலையர் வகுப்பறைகளில் வர்ணம் பூசுவது, வண்ண வட்ட மேஜைகள், நாற்காலிகள் உள்ளிட்டவைகள் அமைக்க ரூ.3 கோடி.
  • மாநகராட்சிக்குட்பட்ட 10 பெரிய பூங்காக்களை தேர்வு செய்து, குழந்தைகள் உபயோகிக்கும் உபகரணங்களை உள்ளடக்கிய சிறப்பு அம்சங்களுடன் மேம்படுத்த ரூ.3 கோடி.
  • மாநகராட்சிக்குட்பட்ட 70 பூங்காக்களில் இருக்கை வசதியுடன் கூடிய புத்தக வாசிப்பு மண்டலங்களை அமைக்க ரூ.2 கோடி.
  • வடசென்னை பகுதி இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில், ஏலந்தனூர், பர்மா நகர் ஆகிய 2 இடங்களில் புதிய இறகுப்பந்து உள்விளையட்டரங்கம் அமைக்க ரூ.2.5 கோடி.
  • கலைஞர் கருணாநிதி மாளிகையில் செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த கட்டணை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் விரிவாக்கப்பட்ட புதிய வீடியோ வால் திரை அமைக்க ரூ.2.5 கோடி ஒதுக்கீடு.

இது இல்லாமல், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் சுகாதாரமான சூழ்நிலை கொண்ட உணவு விற்பனை மண்டலங்கள் (Food Court) அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக, வரும் நிதியாண்டில் 2 இடங்களில் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மொத்தமாக, இந்த நிதியாண்டுக்கான சென்னை பெருநகர மாநகராட்சியின் பட்ஜெட் ரூ.5,145.52 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.681 கூடுதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK ELECTION PLAN: கூட்டணி ஆட்சி.! கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்.? திமுகவை விடாமல் நெருக்கும் காங்கிரஸ்- நடப்பது என்ன.?
கூட்டணி ஆட்சி.! கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்.? திமுகவை விடாமல் நெருக்கும் காங்கிரஸ்- நடப்பது என்ன.?
Embed widget