"ரூ 1700 சொத்து" இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவை விடுங்க.. ஏழை எம்எல்ஏவின் நிலையை பாருங்க
பாஜக எம்.எல்.ஏ பராக் ஷா, நாட்டின் பணக்கார எம்எல்ஏவாக உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 3,400 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல, நாட்டின் ஏழை எம்எல்ஏவும் பாஜகவை சேர்ந்தவர்தான். அவரின் சொத்து மதிப்பு 1700 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் எம்எல்ஏக்களின் சொத்து விவரங்கள் இன்று வெளியாகியுள்ளன. நாட்டின் பணக்கார எம்எல்ஏ யார், ஏழை எம்எல்ஏ யார், எம்எல்ஏக்களின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பாஜக எம்.எல்.ஏ பராக் ஷா, நாட்டின் பணக்கார எம்எல்ஏவாக உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 3,400 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல, நாட்டின் ஏழை எம்எல்ஏவும் பாஜகவை சேர்ந்தவர்தான். அவரின் சொத்து மதிப்பு 1700 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பணக்கார எம்.எல்.ஏ யார்?
மக்களை சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் எம்எல்ஏக்களின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு எம்.எல்.ஏ.க்கள் சமர்ப்பித்த சுய-சத்தியப் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் எம்எல்ஏக்களின் சொத்து விவரங்கள் கணக்கிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 28 மாநில சட்டமன்றங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 4,092 எம்.எல்.ஏ.க்களை சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில் 24 எம்எல்ஏக்களின் பிரமாணப் பத்திரங்கள் படிக்க முடியாத நிலையில் உள்ளது. ஏழு சட்டமன்ற இடங்கள் காலியாக உள்ளன.
ADRஇன் ஆய்வின்படி, மும்பை காட்கோபர் கிழக்கு தொகுதி பாஜக எம்எல்ஏ பராக் ஷா, நாட்டின் பணக்கார எம்எல்ஏவாக உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 3,400 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இவரை தொடர்ந்து, கர்நாடகாவின் கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ.வான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் ரூ.1,413 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் உள்ளார். இவர், கர்நாடகாவின் துணை முதலமைச்சராக உள்ளார்.
ரிப்போர்ட்டில் அதிர்ச்சி தகவல்:
மேற்கு வங்கம் சிந்து தொகுதி பாஜக எம்.எல்.ஏ நிர்மல் குமார் தாரா, நாட்டின் ஏழை எம்எல்ஏ ஆவார். இவரின் சொத்து மதிப்பு 1,700 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
மற்ற பணக்கார எம்எல்ஏக்கள்:
என். சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்: ரூ. 931 கோடி மதிப்பு சொத்து
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி: ரூ. 757 கோடி சொத்து மதிப்பு
கே.எச். புட்டசாமி கவுடா, சுயேச்சை எம்.எல்.ஏ, கர்நாடகா: ரூ. 1,267 கோடி சொத்து மதிப்பு
பிரியகிருஷ்ணா, காங்கிரஸ் எம்.எல்.ஏ, கர்நாடகா: ரூ. 1,156 கோடி சொத்து மதிப்பு
பி.நாராயணா, தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ, ஆந்திரப் பிரதேசம்: ரூ. 824 கோடி சொத்து மதிப்பு
வி. பிரசாந்தி ரெட்டி, தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ, ஆந்திரப் பிரதேசம்: ரூ. 716 கோடி சொத்து மதிப்பு
முதல் 10 பணக்கார எம்எல்ஏக்களில் ஆந்திராவை சேர்ந்தவர்கள் மட்டும் நான்கு எம்எல்ஏக்கள் உள்ளனர். முதல் 20 பணக்கார எம்எல்ஏக்களில் ஐடி அமைச்சர் நாரா லோகேஷ் மற்றும் இந்துபூர் எம்எல்ஏ என். பாலகிருஷ்ணா உட்பட ஏழு சட்டமன்ற உறுப்பினர்களும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஆவர்.

