மேலும் அறிய

Irfan vs Biriyani Man : LIVE வீடியோவில் suicide..விளாசும் நெட்டிசன்ஸ்

பிரபல யூ டியூபர்களான இர்ஃபான் மற்றும் பிரியாணி மேன் ஆகிய இருவருக்குமான மோதல் வலுத்துவந்த நிலையில் பிரியாணி மேன் லைவ் வீடியோவில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரபல ஃபுட் ரிவியூவரான இர்ஃபானுடன் கருத்து மோதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் பிரியாணி மேன் அபிஷேக். தொடர்ந்து பிரியாணி மேன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் மறைமலை நகரில் இர்ஃபானின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்த காரை இர்ஃபானின் உறவினர் அசாருத்தீன் ஓட்டியாக கூறப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு பிரிவுகளின் கீழ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிகழ்வு நடந்து கிட்டதட்ட ஒரு ஆண்டு காலத்திற்கு பிறகு கடந்த ஜூன் மாதம் பிரியாணி மேன் தனது சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் இர்ஃபான் தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஆனால் தனது அரசியல் செல்வாக்கால் அவர் இந்த சர்ச்சைகளில் இருந்து தப்பித்து விடுகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். கார் விபத்து , பிறப்பதற்கு முன்பே குழந்தையின் பாலினத்தை வெளியிட்டது, சுகாதாரமற்ற கடைகளில் சாப்பிட மக்களை ஊக்குவிப்பது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் இர்ஃபான் மீது வைத்தார்.
பிரியாணி மேன் அபிஷேக்கின் வீடியோவிற்கு பதில் கூறும் விதமாக இர்ஃபான் தனது சேனலில் ஒரு மாதம் கழித்து வீடியோ வெளியிட்டார். இதில் தன் மீது அபிஷேக் சுமத்தும் குற்றச்சாட்டுகள் பொய்யனவை என்று  தன்னிடம் உள்ள தரவுகளின் வழி அவர் விளக்கினார். மேலும் பிரியாணி மேனை இந்த வீடியோவில் இர்ஃபான் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியிருந்தார்.

தொடர்ந்து பிரியாணி மேன் வெளியிட்ட வீடியோவில் இர்ஃபானை அவர் கடுமையான ஆபாச வார்த்தைகளால் திட்டினார். சமீபத்தில் பிறந்த இர்ஃபானின் குழந்தை , அவரது உடலை உருவ கேலி செய்து என எல்லை மீறிதான் பேசினார் பிரியாணி மேன். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து பிரியாணி மேன் மீது கடுமையான விமர்சனங்கள் எழத் தொடங்கின. இர்ஃபான் குழந்தையை குறிப்பிட்டு அவர் வீடியோ வெளியிட்டது நெட்டிசன்களில் ஆதரவை இர்ஃபான் பக்கம் திருப்பியது

கடந்த ஒரு வார காலமாக இந்த சர்ச்சை பேசப்பட்டு வரும் நிலையில் நேற்று ஜூலை 29-ஆம் தேதி பிரியாணி மேன் சேனலை நடத்திவரும் அபிஷேக் லைவ் வீடியோவில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தனது தற்கொலைக்கு ஜேசன் என்பவர் தான் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வீடியோவைப் பார்த்த அவரது நண்பர்கள் அபிஷேக்கின் அம்மாவிற்கு ஃபோன் செய்ததைத் தொடர்ந்து அவர் அபிஷேக்கை காப்பாற்றியதாக தெரியவந்துள்ளது. பிரியாணி மேனின் இப்படியான செயலுக்கு மேலும் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என்கிற கருத்து வலுத்து வருகிறது.

அரசியல் வீடியோக்கள்

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
Rahul Gandhi protest | 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget