Coolie : முதல் நாளிலேயே ரூ.200 கோடி.. ரஜினி கணக்கு தப்பாது.. கூலி எந்தெந்த நாடுகளில் ரிலீஸ் தெரியுமா!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் உபேந்திரா, நாகர்ஜூனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சோபின் ஷபீர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். திரைக்கு வருவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கூலி திரைப்படம் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்ப போகிறதாம்.
தங்கம் கடத்தல்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படங்களில் பிராதனமாக போதை பொருள் கடத்தல், கொகைன் போன்ற கடத்தல் சம்பவங்களை மையப்படுத்தியே கதையை இயக்குவார். இது கைதி படத்தில் இருந்தே தொடங்குகிறது. அவர் இயக்கிய கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ போன்ற படங்களிலும் போதை பொருள் முக்கியமான கதாப்பாத்திரமாக டிராவல் செய்கிறது. ஆனால், கூலி படத்தில் அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு தங்கம் கடத்தலை மையப்படுத்தி எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. உலகளவில் தங்கத்திற்கு மவுசு இருப்பதை அனைவரும் அறிவோம். தங்கத்தை வைத்து மாஸ் கமர்ஷியல் படமாக நன்றாகவே குக் செய்திருப்பதாகவும் இப்படம் ரூ.1,000 அடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.81 கோடி பிசினஸ்
கூலி படத்தின் ரைட்ஸ், OTT மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் என அனைத்தும் விற்பனை ஆகிவிட்ட நிலையில், அதன் வெளிநாட்டு உரிமை குறித்த பேச்சுவார்த்தை கடந்த மாதம் நடந்தது. ஆனால், இதுவரை இல்லாத அளவிற்கு மாபெரும் தொகைக்கு இப்படம் விற்பனையாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆல் டைம் ரெக்கார்டு செய்யும் அளவிற்கு கூலி திரைப்படம் ரூ. 81 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இதுவரை எந்த தமிழ் படமும் செய்யாத சாதனை என்றும் சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ரஜினி இப்படம் மூலம் புதிய அத்தியாயத்தை தொடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்கள் காத்திருப்பு
சமீபத்தில் வெளியான இப்படத்தின் சிக்கிட்டு பாடலின் முழு வீடியோவும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. எப்போது ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து வந்த டிஆர். கூலி படத்தில் ரஜினிக்காக ஆட்டம் போட்டிருக்கிறார். சிக்கிட்டு பாடலில் வைப் செய்திருப்பதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் அமீர்கான் இப்படத்தில் தாஹா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதை படக்குழு உறுதி செய்தது. அடுத்தடுத்து சர்ப்ரைஸ்களை அள்ளித்தரும் கூலி படக்குழுவினரால் ரசிகர்கள் திக்குமுக்காடியுள்ளனர். இதுவே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விக்ரம் படத்தில் ரோலக்ஸ் போன்று அமீரும் தாஹாவாக நடித்திருக்கிறார். எந்த அளவிற்கு ரசிகர்களை கவரும் என்பதுதான் ரசிகர்களின் ஆவலாக உள்ளது.
முதல் நாளிலேயே ரூ.200 காேடி
பான் இந்தியா படமாக வெளியாகும் கூலி திரைப்படம் உலகளவிலும் சாதனையை படைக்க முயற்சித்து வருகிறது. இப்படத்தை உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பார்வையாளர்களை சென்றடையும் என்கின்றனர். சர்வதேச திரைப்பட விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹம்சினி என்டர்டெயின்மென்ட், கூலி படத்தை இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெளியீட்டிற்கு தயாராகி வருவதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.200 கோடியை தொட வேண்டும் என்பது தான் இலக்காக இருக்கிறது. கூலி படத்தின் பிசினஸ் தாறுமாறாக இருக்கும் என்கின்றனர்.





















