மேலும் அறிய

Hybrid Cars Offer: ஹைப்ரிட் கார்களுக்கே ரூ.1.85 சலுகையா? அள்ளி வீசிய நிறுவனங்கள், எந்தெந்த மாடல்களுக்கு தெரியுமா?

Hybrid Cars Offer: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹைப்ரிட் கார் மாடல்களுக்கு ரூ.1.85 லட்சம் வரை, சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 Hybrid Cars Offer: ஹைப்ரிட் கார் மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள், ஜுலை மாதத்திற்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைப்ரிட் கார்களுக்கு அதிரடி சலுகை:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹைப்ரிட் கார் அல்லது எஸ்யுவியை வாங்குவதற்கு, இந்த ஜுலை சரியான மாதமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. காரணம் மாருதி சுசூகி, டொயோட்டா மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள், தங்களது அதிகம் விற்பனையாகும் ஹைப்ரிட் கார் மாடல்கள் மீது அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ளன. குறுகிய காலத்திற்கான சலுகைகளை பெற்றுள்ள அந்த கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மாருதி கிராண்ட் விட்டாரா:

கடந்த 2024ம் ஆண்டில் உறுதி செய்யப்பட்ட வலுவான ஹைப்ரிட் அம்சம் கொண்ட, மாருதியின் கிராண்ட் விட்டாரா கார் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.1.85 லட்சம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பணத் தள்ளுபடியாக ரூ.70,000, எக்சேஞ்ச் போனஸ் ஆக ரூ.80,000 மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி ரூ.35,000 அடங்கும். மிட் ஹைப்ரிட் வெர்ஷன் கிராண்ட் விட்டாராவை வாங்க விரும்புபவர்கள் ரூ.1.65 லட்சம் வரை சேமிக்கலாம்.  சிஎன்ஜி எடிஷன்களுக்கு ரூ.20,000 பணத்தள்ளுபடியும், ரூ.50,000 எக்சேஞ்ச் போனஸும் ஜுலை மாதத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கிராண்ட் விட்டாராவின் வலுவான ஹைப்ரிட் மற்றும் மிட் ஹைப்ரிட் கார் மாடல்களுக்கு, முறையே ரூ.1.45 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிஎன்ஜி எடிஷன்களுக்கு ரூ.70,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுபோக 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட மிட் ஹைப்ரிட் வேரியண்ட்களுக்கு, ரூ.57 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பிலான டொமினியன் எடிஷன் அக்செசரிஸ்களும் கிடைக்கிறது. 

ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷக், எம்ஜி ஆஸ்டர், டாடா கர்வ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் மாடல்களுடன் போட்டியிடும் மாருதி கிராண்ட் விட்டாரா ஹைப்ரிட் எடிஷனின் விலை இந்தியாவில் ரூ.11.42 லட்சம் முதல் ரூ.20.52 லட்சம் வரை நீள்கிறது.

இதையும் படியுங்கள்: Mahindra XEV 9e BE 6: பிரச்னை ஓவர், ரூ.4 லட்சம் மிச்சம் - XEV 9e, BE 6 பேக் 2-வில் 79KWh பேட்டரி, விலை தெரியுமா?

டொயோட்டா ஹைரைடர்:

டொயோட்டா நிறுவனத்தின் ஹைரைடர் ஸ்ட்ராங்க் ஹைப்ரிட் மாடலானது, தற்போது ரூ.25 ஆயிரம் பணத் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இதுபோக டொயோட்டா காரை கொண்டிருப்பவர்களுக்கு ரூ.40 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ் அல்லது ரூ.50 ஆயிரம் லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் ஹைப்ரிட் வெர்ஷன் ஹைரைடரை ரூ.75 ஆயிரம் மதிப்பிலான  சலுகைகளுடன் சொந்தமாக்கலாம். இதில் பணத்தள்ளுபடி ரூ.25 ஆயிரம், எக்சேஞ்ச் போனஸ் ரூ.25 ஆயிரம் அல்லது டொயோட்டா கார் வைத்திருப்பவர்களுக்கு லாயல்டி போனஸ் ஆக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுவதும் அடங்கும்.

கிராண்ட் விட்டாராவை போன்றே, டொயோட்டா ஹைரைடரின் ஸ்ட்ராங்க் ஹைப்ரிட்டும் 1.5 லிட்டர் TNGA அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது 92bhp மற்றும் 122Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. இந்த இன்ஜின் ஆனது 79bhp மற்றும் 141Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய மின்சார மோட்டார் மற்றும் 177.6V லித்தியம் அயர்ன் பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லிட்டருக்கு 27.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.

மாருதி கிராண்ட் விட்டாரா, ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஹோண்டா எலிவேட் கார் மாடல்களுடன் மோதும், ஹைரைடர் கார் மாடலின் விலை ரூ.16.81 லட்சத்தில் தொடங்கி ரூ.19.04 லட்சம் வரை நீள்கிறது.

ஹோண்டா சிட்டி eHEV

ஜப்பானை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, தனது செடான் கார் மாடலான eHEV-க்கு ரூ.65 ஆயிரம் மதிப்பிலான பலன்களை அறிவித்துள்ளது. இது அட்கின்சன் சைக்கிள் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகிறது.  அது இரண்டு மின்சார மோட்டார்களுடன் இணைக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக 126bhp மற்றும் 253Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. eCVT கியர்பாக்ஸ் உடன் இந்த கார் லிட்டருக்கு 26.5 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹுண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வாகன் விர்டஸ், ஸ்கோடா ஸ்லாவிய, டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர் கார்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்ளும், ஹோண்டா சிட்டி eHEV காரின் ஆன் - ரோட் விலை சென்னையில் ரூ.26.29 லட்சமாகும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
நட்பில் அடிப்படையில் தான் பாஜகவுக்கு ஆதரவளித்தோம், அரசியல் நோக்கத்தில் அல்ல - செல்லூர் ராஜூ பேட்டி !
நட்பில் அடிப்படையில் தான் பாஜகவுக்கு ஆதரவளித்தோம், அரசியல் நோக்கத்தில் அல்ல - செல்லூர் ராஜூ பேட்டி !
Kuldeep Yadav Record: அனில் கும்ப்ளேவின் சாதனையை போட்டு நொறுக்கிய குல்தீப் யாதவ்; 3-வது ஒருநாள் போட்டியில் அசத்தல்
அனில் கும்ப்ளேவின் சாதனையை போட்டு நொறுக்கிய குல்தீப் யாதவ்; 3-வது ஒருநாள் போட்டியில் அசத்தல்
Embed widget