Olympics 2024 New Sports: இது புதுசா இருக்கே.. பாரீஸ் ஒலிம்பிக்கில் புதிதாய் இணைந்துள்ள போட்டிகள்! முழு லிஸ்ட் இதோ!
Paris Olympics 2024 New Sports: பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் புதிதாக இணைந்துள்ள போட்டிகள் தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்ப்போம்:
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் போட்டிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்க உள்ளது. அந்த வகையில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்த முறை 10,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். 329 நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. 32-க்கும் அதிகமான விளையாட்டுகள் நடக்க இருக்கின்றன. அந்தவகையில் பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் புதிதாக இணைந்துள்ள போட்டிகள் தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்ப்போம்:
கயாக் கிராஸ்:
கயாக் கிராஸ் என்று அழைக்கப்படக்கூடிய இந்த விளையாட்டு இந்த முறை தான் ஒலிம்பிக்கில் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது வேகமாக ஓடும் நீரில் வீரர்கள் கடந்து செல்ல வேண்டும். இதில் வீரர்கள் நீரில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடைகளை கடந்து சிறிதாக இருக்கும் படகில் செல்ல வேண்டும். ஒவ்வொரு தடகள வீரரும் கீழ்நோக்கி நகரும் ஆறு வாயில்கள் மற்றும் மேல்நோக்கி அமைந்துள்ள இரண்டு வாயில்களை உள்ளடக்கிய ஒரு வழியில் செல்ல வேண்டும்.வாயில்களில் ஒன்றைத் தவறவிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவாகள்
கயாக் கிராஸில் பந்தய வீரர்கள் கயாக் ரோலை முடிக்க வேண்டும், படகுடன் 360 டிகிரி தண்ணீரில் சுழன்று மீண்டும் நிமிர்ந்து எழ வேண்டும். நடப்பு உலக சாம்பியனான, கிரேட் பிரிட்டனின் ஜோ கிளார்க், பாரிஸ் ஒலிம்பிக்கில் போட்டியிடுவார். அதேபோல் இவருக்கு கடும் போட்டியாக இருக்கும் வீரராக ராய்ட்டர்ஸ் படி அறியப்படுகிறார்.
Surfing:
சர்ஃபிங், ஸ்கேட்போர்டிங் மற்றும் ஸ்போர்ட் க்ளைம்பிங் விளையாட்டுகள் - இவை ஒவ்வொன்றும் டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகமானது. இச்சூழலில் தன் இந்த விளையாட்டு பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.டோக்கியோவில், அமெரிக்க சர்ஃபர் வீராங்கனௌ கரிசா மூர் ஒலிம்பிக் சர்ஃபிங்கிற்கான முதல் பெண்களுக்கான தங்கத்தை வென்று அசத்தி இருந்தார். அதேபோல் பிரேசிலின் தடகள வீராங்கனை இட்டாலோ ஃபெரீரா ஆண்களுக்கான தங்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Skateboarding:
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஸ்கேட்போர்டிங் போட்டியானது டோக்கியோ, பூங்கா மற்றும் தெருக்களில் விளையாடப்படுவதைப் போல் இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கும். பார்க் ஸ்கேட்போர்டிங்கில், விளையாட்டு வீரர்கள் வளைந்து, நெழிந்து செல்வார்கள். தெரு (street) ஸ்கேட்போர்டிங்கில், தடகள வீரர்கள் படிக்கட்டுகள் மற்றும் கைப்பிடிகள் போன்ற தடைகளுடன் சாலை போன்ற பாதைகளில் சறுக்கி தங்களது திறமையை வெளிப்படுத்துவார்கள்.
முன்னதாக கடந்த முறை டோக்கியோவில் ஸ்கேட்போர்டிங்கிற்காக நான்கு விளையாட்டு வீரர்கள் தங்கப் பதக்கங்களை வென்றனர்: ஆஸ்திரேலியாவின் கீகன் பால்மர் (men’s park), ஜப்பானின் யூடோ ஹொரிகோம் (men’s street), ஜப்பானின் சகுரா யோசோசுமி (women’s park) மற்றும் ஜப்பானின் மோமிஜி நிஷியா (women’s street) வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sport climbing:
Sport climbing-ல் பாறை மீது ஏறும் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளில் நடத்தப்படும். டோக்கியோவில், ஸ்லோவேனியாவின் ஜான்ஜா கார்ன்பிரெட் பெண்களுக்கான Sport climbing-ல் தங்கம் வென்றார், ஸ்பெயினின் ஆல்பர்டோ ஜின்ஸ் லோபஸ் ஆண்கள் பிரிவில் தங்கம் வென்றார். இச்சூழலில் தான் டோக்கியோ ஒலிம்பிக்கை தொடர்ந்து இந்த முறை பாரீஸ் ஒலிம்பிக்கில் Sport climbing இணைந்துள்ளது .
பிரேக் டான்ஸ்:
பிரேக்கிங் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவானது. யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள சில ஆப்பிரிக்க அமெரிக்க சமூகங்கள் பொதுவாக பிரேக்டான்சிங், பி-பாய்யிங் மற்றும் பி-கேர்லிங் போன்ற பிற பெயர்களின் தோற்றத்துடன் தொடர்புடையவை.
இப்போது ஒரு விளையாட்டாக அறிமுகமாக உள்ளது, பிரேக்கிங் சாராம்சத்தில் ஒரு நடன வடிவமாக உள்ளது, இது உலகளவில் பரவலாக இடம் பெற்றுள்ள விளையாட்டாக உள்ளது. அதனால் தான் இந்த போட்டிகள் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களின் ஒன்றான பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இடம் பெற்றது. பொதுவாக பிரெஞ்சு நாட்டில் அதிகம் இந்த போட்டிகள் தெருக்களில் நிகழ்த்தப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. முதன் முதலில் பிரேக்டான்சிங் கடந்த 2018 ஆம் ஆண்டு யூத் ஒலிம்பிக் விளையாட்டுகளில் அறிமுகமானது.அப்போது அதிகம் பார்வையாளர்களை கவர்ந்ததால் இந்த முறை ஒலிம்பிக் தொடரில் இணைக்கப்பட்டுள்ளது.
பாரீஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுகளில் பிரேக்கிங்:
பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில், நிகழ்வுகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன, இதில் 16 பங்கேற்பாளர்கள் ரவுண்ட்-ராபின் வடிவத்தில் ஒருவருக்கொருவர் போட்டியிட உள்ளனர். ஆரம்பச் சுற்றில் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதியில் இறுதிப் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒரு சிறந்த மூன்று வடிவமாக இருக்கும். ஒவ்வொரு பிரேக்கருக்கும் ஒரு நிமிட கால அவகாசம் வழங்கப்படும். ஒரு வீரர் முடித்தவுடன், மற்றவர் உடனடியாக தொடங்க வேண்டும்.