FIFA Worldcup: தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் கத்தார்..! முழு ஆதரவளித்த ஃபிபா தலைவர்..! என்ன காரணம்..?
ஃபிபா உலகக் கோப்பை 2022 நடத்த கத்தார் உரிமைகளை பெற்றதில் இருந்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
ஃபிபா சர்வதேச கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் இந்த தொடரானது (நாளை) வருகின்ற 20ம் தேதி கத்தார் நாட்டில் தொடங்குகிறது. உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நாளை தொடங்கவுள்ளதால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும் ஆவலும் அதிகரித்து வருகிறது.
32 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் விளையாட இருக்கின்றனர். முதல் போட்டியானது வருகின்ற 20ம் தேதி கத்தார்-ஈகுவடார் நாடுகளுக்கிடையே நடைபெற இருக்கிறது.
தொடரும் விமர்சனங்கள்:
ஃபிபா உலகக் கோப்பை 2022 நடத்த கத்தார் உரிமைகளை பெற்றதில் இருந்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முன்னதாக, கத்தார் உலகக் கோப்பை தொடரை நடத்துவதற்கான ஏலத்தில் லஞ்சம் கொடுத்ததாகவும், மைதானத்தில் ரசிகர்கள் பீரை குடிக்க தடை செய்தது போன்ற சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
அந்த வகையில் இன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நடத்துவது மற்றும் LBGTQ உரிமைகள் மீதான கர்த்தார் நாட்டின் அணுகுமுறைக்காக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
FIFA president Gianni Infantino says the West is in no position 'to give moral lessons' to Qatar, adding that European nations should instead apologise for their own histories.
— Sky News (@SkyNews) November 19, 2022
Read more here 👉 https://t.co/k4QvT4osug
📷 REUTERS/Matthew Childs pic.twitter.com/XNiiaifc77
பிபா கால்பந்து தலைவர் கியானி இன்ஃபாண்டினோ விளக்கம்:
இந்தநிலையில், கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பிபா கால்பந்து தலைவர் கியானி இன்ஃபாண்டினோ செய்தியாளர்களை சந்தித்து கர்த்தார் மீதான விமர்சனத்திற்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ”மேற்கு நாடுகள் கத்தாருக்கு 'தார்மீக பாடங்களை' கொடுக்க முடியாது என்று கூறுகிறார், அதற்கு பதிலாக ஐரோப்பிய நாடுகள் தங்கள் சொந்த வரலாறுகளுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இன்று நான் கத்தாரியாக உணர்கிறேன். இன்று நான் அரபியாக உணர்கிறேன். இன்று நான் ஆப்பிரிக்கனாக உணர்கிறேன். இன்று தன்பாலினச் சேர்க்கையாளராக உணர்கிறேன். இன்று நான் ஊனமுற்றவனாக உணர்கிறேன். இன்று புலம்பெயர்ந்த தொழிலாளியாக உணர்கிறேன். நிச்சயமாக நான் கத்தாரியனோ, நான் ஒரு அரேபியனோ, ஆப்பிரிக்கனோ அல்ல, ஆனால் நான் அப்படி உணர்கிறேன், ஏனென்றால் வெளிநாட்டில் வெளிநாட்டவராக பாகுபாடு காட்டப்படுதல், கொடுமைப்படுத்துதல் ஆகியவற்றின் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியும் “ என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை நடத்து கர்த்தார் நாடு கடைசி நேரத்தில் பீரை தடை செய்தது மற்ற நாட்டுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். பீர் மைதானத்தில் ரசிகர்கள் பயன்படுத்த இறுதிவரை முயற்சித்தோம். ஒரு நாளைக்கு 3 மணி நேரம் பீர் குடிக்க முடியாவிட்டால் ஒன்றும் ஆகாது. பிரான்ஸ், ஸ்பெயின், ஸ்காட்லாந்தில் ஸ்டேடியங்களில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது” என்றும் தெரிவித்தார்.