HDFC Bank Personal Loan: உடனடியாக ரூ.40 லட்சம் வரை கடன் தேவையா? புதிய விரைவு திட்டத்தை அறிமுகபடுத்திய எச்டிஎஃப்சி வங்கி
HDFC Bank Personal Loan: எச்டிஎஃப்சி வங்கி அறிமுகப்படுத்தியுள்ள புதிய விரைவு தனிநபர் கடன் திட்டம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

HDFC Bank Personal Loan: எச்டிஎஃப்சி வங்கிய்ன் விரைவு தனிநபர் கடனுக்கான ஒப்புதல் உங்கள் கடன் மதிப்பெண் மற்றும் வருமானத்தைப் பொறுத்தது.
HDFC வங்கி விரைவு தனிநபர் கடன் திட்டம்:
மருத்துவ அவசரநிலை, திருமணச் செலவு , வீடு புதுப்பித்தல் மற்றும் உயர்கல்வி என எதுவாக இருந்தாலும் சரி... திடீரென்று அதிக அளவு பணம் தேவைப்படும்போது மக்கள் வங்கிக் கடன்களை நாடுகிறார்கள். வங்கிகளில் இருந்து பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம், தனியார் தனிநபர்களிடமிருந்து பெறும் கடன்களுக்கான வட்டியை விடக் குறைவு. மேலும், அசல் + வட்டி இரண்டும் EMI-களாக செலுத்தப்படுகின்றன. இந்நிலையில் அதிக தொகையை கடனாக பெற விரும்பும் பயனர்களை கருத்தில் கொண்டு, HDFC வங்கியானது "விரைவு தனிநபர் கடன்" திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
HDFC வங்கி விரைவு தனிநபர் கடன் திட்டம் என்றால் என்ன?
இது ஒரு பிணையமற்ற கடன். இந்தக் கடனைப் பெற நீங்கள் எந்த சொத்தையும் வங்கியில் அடமானம் வைக்க வேண்டியதில்லை. உங்கள் சிபில் ஸ்கோர் மற்றும் வருமானம் திருப்திகரமாக இருந்தால் HDFC வங்கி விரைவு தனிநபர் கடனுக்கு நீங்கள் அங்கீகரிக்கப்படுவீர்கள். இந்தக் கடன் திட்டத்தின் கீழ், நீங்கள் ரூ. 40 லட்சம் வரை கடன் பெறலாம்.
பயனாளருக்கான தகுதிகள் என்ன?
பயனாளரின் வயது 21 வயது முதல் 60 வயது வரை இருந்தால், HDFC வங்கியின் விரைவு தனிநபர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் கிரெடிட் ஸ்கோர் 720க்கு மேல் இருந்தால் கடன் பெறுவது எளிதாக இருக்கும். கூடுதலாக, உங்கள் மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ. 25,000 ஆக இருக்க வேண்டும். ஏதேனும் தனியார் நிறுவனம் அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கடனுக்கான வட்டி விகிதம் என்ன?
HDFC வங்கி விரைவு தனிநபர் கடன் பிரிவில் வட்டி விகிதங்கள் 10.85 சதவிகிதம் முதல் 24.00 சதவிகிதம் வரை இருக்கும். செயலாக்க கட்டணம் ரூ. இது 6,500 வரை இருக்கலாம். இதற்கு ஜிஎஸ்டி கூடுதலாக செலுத்த வேண்டும். இது தவிர, பல்வேறு மாநிலங்களில் பொருந்தக்கூடிய சட்டங்களின்படி முத்திரை வரி உள்ளது. மேலும் விவரங்களுக்கு வங்கியின் வாடிக்கையாளர் சேவை குழுவை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
- தனிப்பட்ட அடையாள அட்டை (ஆதார் போன்றவை)
- முகவரிச் சான்று
- 3 மாத வங்கி அறிக்கை
- படிவம் 16 உடன் 2 மாத பே ஸ்லிப்
எப்படி விண்ணப்பிப்பது?
- HDFC வங்கியின் அதிகாரப்பூர்வ நெட் பேங்கிங் அல்லது செயலியில் உள்நுழையவும்
- அதில், விரைவு தனிநபர் கடன் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
- உங்கள் தொழிலைத் தேர்ந்தெடுக்கவும்
- மொபைல் எண், பிறந்த தேதி/பான் மூலம் வெரிஃபைட் செய்யவும்
- அங்கு கேட்கப்படும் தனிப்பட்ட விவரங்களை வழங்கவும்
- உங்கள் வருமானத்தை உறுதி செய்யுங்கள்
- கடன் சலுகைகளைச் சரிபார்க்கவும்
- ஆதார் அடிப்படையிலான KYC ஐ முடிக்கவும்
நீங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தவுடன், வங்கி அதை மதிப்பாய்வு செய்து திருப்தி அடைந்தால், உங்களுக்குக் கடன் வழங்கும்.





















