ஓப்பனிங்கே இல்லாமல் போன தனுஷின் NEEK.. தனுஷின் அந்த ஒரு தவறுதான் காரணம்
தனுஷ் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைக்காததற்கு இதுதான் காரணம்

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் சங்கர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரொமாண்டி காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஓப்பனிங்கே இல்லை
ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நீக். தனுஷ் இயக்கிய முந்தைய இரு படங்களில் அவரே நடித்திருந்த நிலையில் இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளார்கள். கடந்த ஆண்டு படத்தின் டைட்டில் வெளியானது முதல் ரசிகர்களிடம் பெரியளவில் பேச்சு இருந்தது. மேலும் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் நிச்சயம் படத்திற்கு பெரியளவில் ஓப்பனிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. கடந்த சில தினங்கள் முன்பு படத்தின் முன்பதிவுகள் தொடங்கின. ஆனால் எதிர்பார்த்ததை விட மிக சுமாரானா ஓப்பனிங்கே படத்திற்கு கிடைத்துள்ளது. அதே நேரம் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது.
தனுஷ் செய்த ஒரு தவறு
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திற்கு பெரியளவில் ஓப்பனிங் இல்லாமல் போனதற்கு காரணம் இந்த படத்தை தனுஷ் களத்தில் நின்று ப்ரோமோட் செய்யவே இல்லை. ஒரு பக்கம் டிராகன் படத்தின் நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து , மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி என மூவரும் சேர்ந்து நாலா பக்கமும் படத்தை ப்ரோமோட் செய்தார்கள். ஆனால் நீக் படக்குழு சார்பாக படத்தில் நடித்த இளம் நடிகர்கள் மட்டுமே ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள். ஒரு நிகழ்வில் கூட தனுஷ் இந்த படத்தை நேரடியாக ப்ரோமோட் செய்யவில்லை. ஒருவேளை தனுஷ் அப்படி செய்திருந்தார் என்றால் நிச்சயம் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருந்திருக்கும்.
மேலும் படிக்க : Movie Review : காவியமா..? கிரிஞ்சா..? தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் பட விமர்சனம் இதோ
கமலின் ஆணவப் பேச்சால் கடுப்பான செல்வராகவன்..இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவை பாருங்க

