வேகமாக வந்த லாரி! விபத்தில் சிக்கிய ரேஞ்ச் ரோவர் கார்! கங்குலிக்கு என்னாச்சு? எப்படி இருக்கிறார்?
பர்த்வானில் உள்ள பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவு கங்குலி காரில் சென்று கொண்டிருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் கார் வேகமாக வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் உள்ள பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவு கங்குலி காரில் சென்று கொண்டிருந்தார். துர்காபூர் விரைவு சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது அங்கு வேகமாக வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சவுரவு கங்குலி அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் கங்குலி காரின் பின்னால் வந்த இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன.
இந்த விபத்து சம்பவத்தால் கங்குலி சிறிது நேரம் தாமதமாக நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர், பர்த்வான் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கங்குலி கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய கங்குலி, "நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பர்த்வானில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் என்னை அழைத்ததில் நான் இன்னும் மகிழ்ச்சியடைகிறேன். பி.டி.எஸ் (பர்த்வான் விளையாட்டு சங்கம்) நீண்ட காலமாக என்னை வரச் சொன்னது. இன்று இங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிஏபி பர்த்வான் விளையாட்டு அமைப்புடன் 50 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறது. மாவட்டத்தில் இருந்து பல வீரர்கள் உருவாகியுள்ளனர். எதிர்காலத்திலும் இதே வழியில் மாவட்டத்திலிருந்து வீரர்களை நாங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும்," எனத் தெரிவித்தார்.
கிரிக்கெட் ரசிகர்களால் தாதா என கெத்தாக அழைக்கப்பட்டவர்தான் சவுரவ் கங்குலி. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கங்குலி, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பிசிசிஐ தலைவராகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

