SA VS AFG : பயமறியா ஆப்கானிஸ்தான்.. பயமுறுத்துமா தென் ஆப்பிரிக்கா? கராச்சியில் வெல்லப்போவது யார்?
SA VS AFG : காரச்சி தேசிய மைதானத்தில் நடைப்பெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இன்று(21.02.25) நடைப்பெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி பாகிஸ்தானின் கராச்சி மைதானத்தில் நடைப்பெறவுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி:
ஐசிசி போட்டிகளில் ஆப்கானிஸ்தான் ஒரு ஆபத்தான அணியாக இருந்து வருகிறது. 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கையை தோற்கடித்த ஆப்கன் அணி, 2024 டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி அரையிறுதி வரை சென்றது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் இதேபோன்ற வெற்றியை தொடரும் முனைப்பில் ஆப்கானிஸ்தான் உள்ளது. அதே போல சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான பாகிஸ்தான் ஆடுகளங்கள் ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாக இருக்கும்.
தென்னாப்பிரிக்கா அணி:
தென்னாப்பிரிக்காவும் வலுவான அணியைக் கொண்டுள்ளது. டெம்பா பவுமா, மார்க்ராம், ஹென்ரிச் கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரின் வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது தென்னாப்பிரிக்கா, பந்துவீச்சை பொறுத்தவரை காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ் மற்றும் தப்ரைஸ் ஷம்சி ஆகியோரைக் சக்திவாய்ந்த பந்துவீச்சை கொண்டுள்ளது தென் ஆப்பிரிக்கா, இருப்பினும் அன்ரிச் நோர்க்கியா, ஜெரால்ட் கோட்சியா ஆகியோர் அணியில் இல்லாதது தென் ஆப்பிரிக்க அணிக்கு சற்று பலவீனமானதாக உள்ளது.
இதையும் படிங்க:'Humanity Needs To Renew The Human Spirit': Watch ABP Network Chief Editor Atideb Sarkar's Full Speech
மைதானம் எப்படி?
கராச்சி மைதானம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமானதாக இருக்கும். ஆனால் முற்றிலும் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் என்று சொல்ல முடியாது, பந்து வீச்சாளர்களுக்கும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கும் ஆடுகளமாக உள்ளது. பாகிஸ்தானுக்கும் நியூசிலாந்திற்கும் இடையில் இங்கு நடந்த முதல் போட்டியில், ஆடுகளம் சீரற்ற பவுன்ஸ் பேட்டிங்கை தொடங்கும் போது பேட்ஸ்மேன்களுக்கு சற்று கடினமானதாக இருக்கும், ஆனால் சிறிது நேரம் நின்று ஆடினால் இந்த மைதானத்தில் நிச்சயம் ரன்களை அடிக்க முடியும் என்பதை கடந்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் காட்டினர்.
இதையும் படிங்க: Mohammed Shami : ஐசிசி போட்டிகளின் ராக்கி பாய்... சாதனைகளை நொறுக்கி தள்ளிய முகமது ஷமி
நேருக்கு நேர்
ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இதற்கு முன்பு ஐந்து ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன, அதில் தென்னாப்பிரிக்கா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, ஆப்கானிஸ்தான் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
எங்கு? எப்போது? நேரலை எப்படி?
காரச்சி தேசிய மைதானத்தில் நடைப்பெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் இலவசமாக நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படும். தொலைக்காட்சிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.
இதையும் படிங்க: வேகமாக வந்த லாரி! விபத்தில் சிக்கிய ரேஞ்ச் ரோவர் கார்! கங்குலிக்கு என்னாச்சு? எப்படி இருக்கிறார்?
உத்தேச அணி:
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (வாரம்), இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேட்ச்), அஸ்மத்துல்லா உமர்சாய், குல்பாடின் நைப், முகமது நபி, ரஷித் கான், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி.
தென்னாப்பிரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), ரியான் ரிக்கெல்டன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ரஸ்ஸி வான்டர் டி டுசென், ஹென்ரிச் கிளாசன் (கீப்பர்.), டேவிட் மில்லர், வியான் முல்டர், மார்கோ யான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

