Watch Video: 16 நாட்களில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. நியூயார்க் நாசாவ் ஸ்டேடியம் இன்னும் தயாராகவில்லையா..?
இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் இந்த நாசாவ் கிரிக்கெட் ஸ்டேடியம் இதுவரை இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்று கூறப்படுகிறது.
ஐபிஎல் 2024 சீசன் முடிந்த கையோடு வருகின்ற ஜூன் 2ம் தேதி முதல் 2024 டி20 உலகக் கோப்பை போட்டி தொடங்குகிறது. இந்தாண்டு இந்த உலகக் கோப்பையை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடந்துகின்றன.
இதில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிக எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வருகின்ற ஜூன் 9ம் தேதி நடைபெறுகிறது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது நியூயார்க்கில் உள்ள நாசாவ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
டி20 உலகக் கோப்பைக்காக இந்த ஸ்டேடியம் முற்றிலும் புதிதாக சீரமைக்கப்பட்டு வருகிறது. அதன் சமீபத்திய பல படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Bahot he khobsurat stadium 🏟️ world cup k liye ready kea ja Raha hai.
— Jamil Handsome (@ajtogether5) April 26, 2024
🏟️ The Nassau County International Cricket Stadium in New York is getting ready for the T20 World Cup 🤩#ICCT20WorldCup#PakistanCricket pic.twitter.com/0mr8fYFK9i
இருப்பினும், இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் இந்த நாசாவ் கிரிக்கெட் ஸ்டேடியம் இதுவரை இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்று கூறப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை போட்டி நடைபெற இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில், இன்னும் முழுசாக ஸ்டேடியம் தயாராகாதது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த ஸ்டேடியம் தற்போது முழுமையாக தயாராகிவிட்டதாக மற்றொரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவும் இதோ!
What a beautiful aerial view of Nassau County International Stadium, New York!
— Baljeet Singh (@ImTheBaljeet) May 23, 2024
Outfield is top-notch. pic.twitter.com/vpaeXWIWRs
பயிற்சி ஆட்டத்தில் மோதும் இந்தியா:
2024 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியும் நியூயார்க்கில் புதிதாக தொடங்கப்படவுள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்த ஸ்டேடியத்தில் இந்திய அணி, டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக விளையாடுவது பலமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் போன்ற ஒரு அணியை எதிர்கொள்ளும்போது பிட்ச் பற்றி எந்தவொரு புரிதலும் இல்லாமல் இந்திய அணி களமிறங்குவதன் பாதகமாக ஆகலாம். இதையடுத்து, வங்கதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டம் இந்திய அணிக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கலாம்.
View this post on Instagram
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024க்கான தூதராக உலகின் மின்னல் வேக மனிதன் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரம் சில கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் இணைந்து நியூயார்க்கில் புதிதாக திறக்கப்பட்ட நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தை பார்வையிட்டார். தற்போது, இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.