TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
குரூப் 4 தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான தேதிகளை டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தமிழக அரசில் 9,491 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு ஜனவரி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 22ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எனினும் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் 06.02.2025, 07.02.2025, 18.02.2025, 19.02.2025, 20.02.2025, 21.02.2025, 07.03.2025 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறாது.
15.91 லட்சம் பேர் எழுதிய தேர்வு
முன்னதாக ஜூன் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தேர்வை எழுத 20,37,101 பேர் விண்ணப்பித்தனர். அதில், 20,36,774 பேர் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். எனினும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 4,45,345 பேர் எழுதவில்லை. 15,91,429 பேர் எழுதினர்.
சுமார் 16 லட்சம் பேருக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ஆம் தேதி அன்று வெளியாகின. அதே நாளில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் 559 உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக அதிகரித்தது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரலாற்றிலேயே முதல்முறையாக குறைந்த நாட்களிலேயே வெளியிடப்பட்டன.
ஜன.22 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு
இந்த நிலையில், இதில் தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களுக்கு தேர்வர்களுக்கு ஜனவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Link: https://t.co/TOckLyjsvB pic.twitter.com/dOL9CPrXxl
— TNPSC (@TNPSC_Office) January 8, 2025
இதற்குத் தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் விவரங்களும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/document/Counselling/01_2024_GROUP_IV_PCV_PUBL_20250108.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, அவற்றைக் காணலாம்.
எந்தெந்த பணிகளுக்கு குரூப் 4 தேர்வு?
குரூப் 4 தேர்வு வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப நடத்தப்படுகிறது. தற்போது வனக் காப்பாளர், வனக் கண்காணிப்பாளர் பணி இடங்களுக்கும் குரூப் 4 தேர்வு மூலமே ஆட்சேர்க்கை நடைபெறுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வ தளமான https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.