Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie : கூலி திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டடிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் ஜெயிலர் திரைப்படம் வெளியான அதே தேதியில் வெளியாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
கூலி திரைப்படம்:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் , உபேந்திரா , செளபின் சாஹீர் , ஆமீர் கான் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
இதையும் படிங்க: Ar Rahman : ”நல்லா மியூசிக் போடுறீங்க.. ஆனா இதையும் பண்ணுங்க..”ராக்ஸ்டாருக்கு இசைப்புயல் அட்வைஸ்
விறுவிறுப்பாக நடைப்பெறும் படப்பிடிப்பு:
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று தாய்லாந்து புறப்பட்டு சென்றார். தாய்லாந்தின் பாங்காக் நகரில் படத்தின் முக்கிய சண்டைக்காட்சி படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Sound-ah yethu! Deva Varraar🔊🔥 Celebrate Superstar @rajinikanth’s Birthday with #ChikituVibe from #Coolie ✨
— Sun Pictures (@sunpictures) December 12, 2024
▶️ https://t.co/Avio9WrxuY@Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @iamSandy_Off @anbariv @girishganges…
ஆகஸ்ட்டில் ரீலிஸ்?
கூலி திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே ஆகஸ்ட் 14-ல் தான் கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படமானது வெளியானது. ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Toxic: வெளியானது கேஜிஎஃப் நாயகன் யாஷ்ஷின் டாக்சிக் பட டீசர் - ஸ்டைலிஷான லுக், மிரட்டலான மேக்கிங்
கூலித் திரைப்படம் முன்பு தகவலின் படி கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.