கிராமத்து பெண்ணை திருமணம் செய்யப்போகும் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ்
பான் இந்திய ஸ்டார் நடிகர் பிரபாஸ் ஹைதராபாதைச் சேர்ந்த பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பிரபாஸ்
பான் இந்திய நடிகர் பிரபாஸ் (Prabhas) அடுத்தடுத்த பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். பாகுபலி 1 , 2 படங்கள் பெரியளவில் வெற்றிபெற்றாலும் பிரபாஸ் நடித்த ராதே ஷியாம், ஆதிபுருஷ் போன்ற படங்கள் தோல்வியை தழுவின. இதனால் அவரது மார்கெட் சரிந்து வந்தது. 2023 ஆம் ஆண்டு வெளியான சலார் திரைப்படம் அவருக்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது. கடந்த ஆண்டு நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான கல்கி திரைப்படம் 1000 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
பிரபாஸ் திருமணம்
45 வயதை நெருங்கி வரும் பிரபாஸ் இன்னும் பேச்சுலராகவே சுற்றி வருகிறார். பிரபாஸ் மற்றும் நடிகை அனுஷ்கா காதலித்து வருவதாக கடந்த காலத்தில் தகவல்கள் வெளியாகின. இருவரும் இன்னொருவர் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று சந்தித்துக் கொள்வதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி குறித்து பிரபாஸ் எப்போது தவிர்த்து வருகிறார். பிரபாஸ் எங்கே சென்றாலும் அவரது திருமணம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.
இப்படியான நிலையில்தான் நடிகர் ராம் சரண் நிகழ்ச்சி ஒன்றில் பிரபாஸின் திருமணம் பற்றி தகவலை உறுதிபடுத்தினார். இதனைத் தொடர்ந்து வெளியாகியுள்ள தகவலின் படி பிரபாஸ் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். ஹைதராபாதில் உள்ள ஞானபாவரம் என்கிற் சிறு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை அவர் தனது குடும்பத்தின் சம்பதத்துடன் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
#Prabhas Marrying an ordinary Girl from Ganapavaram Village is an awesome news
— Ravi @ Prabhas Army (@RaviPrabhas333) January 11, 2025
RC confirmed it. For people who are not aware, both #Prabhas & @AlwaysRamCharan come from same village Mogalthuru
E Vishayam Nijam ani Nammutunam, endukante RC village name tho Saha cheppedu kanuka pic.twitter.com/sgKrTHqeF3





















