மேலும் அறிய

அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்

100-க்கும் அதிகமான ஆலைகள் மூடப்பட்ட நிலையில் குறைந்த அளவிலான ஆலைகளில் மட்டும் பொங்கல் பண்டிகைக்காக அச்சு வெல்லம் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்: நெருங்கி வரும் பொங்கல் பண்டிகைக்காக அச்சு வெல்லம் தயாரிக்கும் பணிகள் வெகு மும்முரமாக நடந்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை குதியில் கரும்பில் மஞ்சள் நோய் தாக்குதல், தொடர் விலை வீழ்ச்சியால் 100-க்கும் அதிகமான ஆலைகள் மூடப்பட்ட நிலையில் குறைந்த அளவிலான ஆலைகளில் மட்டும் பொங்கல் பண்டிகைக்காக அச்சு வெல்லம் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜாதி, இனம், மொழி என எந்த வேறுபாடும் இல்லாமல் தமிழகம் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் தமிழர்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். பொங்கல் சீக்கிரமாக பொங்கினால் அந்த ஆண்டு செல்வ செழிப்புடனும், அனைத்து வளங்களும் இருக்கும் என்றும், வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும் என்றும் நம்புகின்றனர். இவ்வாறு பல்வேறு சிறப்புகளைப் பெற்ற தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வரும் 14 ம் தேதி கொண்டாடப்படுகிறது.


அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்

பொங்கல் என்றாலே கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை தான் விற்பனையில் முக்கியத்துவம் பெறும். கரும்பு சாறில் இருந்து தயாராகும் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவை உடலுக்கு உறுதியைத் தரும் உணவுப் பொருளாக பயன்படுகிறது.  நோய் தீர்க்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு அச்சு வெல்லத்திற்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சுற்றியுள்ள வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், கணபதிஅக்ரஹாரம், மாகாளிபுரம், உள்ளிக்கடை, பட்டுக்குடி உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் அச்சு வெல்லம் தயார் செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் 20 முதல் 30 ஆலைகள் செயல்பட்ட நிலையில்  கரும்பில் மஞ்சள்  நோய் தாக்குதல், வேலை ஆட்கள் பற்றாக்குறை, தொடர் விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டு தற்போது ஒன்றிரண்டு ஆலைகள் மட்டுமே இப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைகளில்  அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாகாளிபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தரப்பில் கூறுகையில், அய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அச்சு வெல்லம் தயாரிப்பதற்காக சி.ஓ-32,1110 ஆகிய ரக கரும்புகளை சாகுபடி செய்துள்ளோம். இந்த கரும்பினை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து அறுவடை செய்யத் தொடங்குவோம். இப்போது கரும்பினை அறுவடை செய்து வெல்லம் தயாரித்து வருகிறோம். ஒரு ஏக்கர் கரும்பில் இருந்து சுமார் 160 சிப்பம் (ஒரு சிப்பம்-30கிலோ) வெல்லம் தயாரிக்கலாம். பழங்காலத்தில் மாடுகளை பயன்படுத்தி கரும்பிலிருந்து சாறு பிழிந்து எடுத்து வெல்லம் தயாரிக்கப்பட்டது. இப்போது மின்சார மோட்டார் மற்றும் ஆயில் இன்ஜின் ஆகியவற்றைக் கொண்டு சாறு எடுத்து வெல்லம் தயார் செய்கிறோம். அச்சு வெல்லத்திற்கு நல்ல சுவையை பக்குவம் தான் நிர்ணயிக்கிறது.

கரும்பு சாற்றுடன் காய்ச்சினால் தான் நல்ல சுவையான அச்சுவெல்லம் கிடைக்கும். ஒரு நாளில் 500 முதல் 1500 கிலோ வரை அச்சுவெல்லம் தயாரிக்கலாம். அச்சுவெல்லத்தின் நிறத்தைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ. 1300 முதல் ரூ. 1400 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. உர விலை, டீசல் விலை, அச்சு வெல்லம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருள்களின் விலை,  வேலையாட்கள் சம்பளம் போன்றவை கடந்த ஆண்டுகளை விட தற்போது பல மடங்கு உயர்ந்து விட்டது. இந்நிலையில் வெல்லத்தின் தற்போதைய கொள்முதல் விலை நிலவரம் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாத நிலையில் உள்ளது.

கரும்பில் மஞ்சள் நோய் தாக்குதல், தொடர் விலை வீழ்ச்சியால் கரும்பு சாகுபடி இப்பகுதியில் பெருமளவு குறைந்து விட்டது. இதனால் 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டு விட்டது. தற்போது குறைந்த ஆலைகளில் மட்டும் தயாராகும் வெல்லம் கரூர், பழனி, மதுரை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஏற்றுமதியாகிறது. மற்ற மாவட்டங்களில் தயாராகும் அச்சு வெல்லத்தை விட இங்கு தயாராகும் அச்சு வெல்லத்தின் சுவை நன்றாக இருக்கும். அதனால் தான் அனைவரும் இங்கு தயாராகும் அச்சு வெல்லத்தை விரும்பி வாங்குகின்றனர். தமிழக அரசு கரும்பு விவசாயிகளிடம் நேரிடையாக வெல்லம் கொள்முதல் செய்து பொங்கல் தொகுப்பில் சர்க்கரைக்கு (ஜூனி) பதில் வெல்லம் வழங்க வேண்டும். இதன் மூலம் இப்பகுதி கரும்பு விவசாயிகள் பெரிதும் பயன் அடைவார்கள். இவ்வாறு தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Embed widget