"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்சிட்டிவான வழக்கில், குறுகிய நோக்குடன் செயல்பட்டு, அரசியல் லாபத்துக்காக மாணவர்களின் கல்வியைப் பாழாக்க வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.
வாச்சாத்தி தொடங்கி பொள்ளாச்சி வரை சந்தி சிரித்த ஆட்சி நடத்திய கட்சியின் 'சார்கள்' பெண்கள் பாதுகாப்பு பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம் என அதிமுகவுக்கு எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழக சட்டப்பேரவையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பாக இன்று விவாதம் நடைபெற்றது. இதில், ஆளும் திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர்.
சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்:
கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட சரமாரி கேள்விகளை எழுப்பினர். அப்போது, பேசிய பாஜக எம்.எல்.ஏ காந்தி, "பாலியல் வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றார்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கிடையே, இந்த விவகாரத்தை முன்வைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
"கல்வியைப் பாழாக்க வேண்டாம்"
இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் அதிமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், "பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் சாமானியரா, கட்சி ஆதரவாளரா, காவல் ஆய்வாளரா, அதிகாரம் பொருந்தியவரா என்றெல்லாம் இந்த அரசு பார்க்காது. யாராக இருந்தாலும் கடுமையான, உச்சபட்ச தண்டைனையைச் சட்டப்படி பெற்றுத் தருவோம்!
பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் சாமானியரா, கட்சி ஆதரவாளரா, காவல் ஆய்வாளரா, அதிகாரம் பொருந்தியவரா என்றெல்லாம் இந்த அரசு பார்க்காது... யாராக இருந்தாலும் கடுமையான, உச்சபட்ச தண்டைனையைச் சட்டப்படி பெற்றுத் தருவோம்!
— M.K.Stalin (@mkstalin) January 8, 2025
வாச்சாத்தி, தருமபுரி தொடங்கி பொள்ளாச்சி வரை சந்தி சிரித்த ஆட்சி… pic.twitter.com/bTPalxuEaR
வாச்சாத்தி, தருமபுரி தொடங்கி பொள்ளாச்சி வரை சந்தி சிரித்த ஆட்சி நடத்திய கட்சியின் 'சார்கள்' பெண்கள் பாதுகாப்பு பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்! சென்சிட்டிவான ஒரு வழக்கில், குறுகிய நோக்குடன் செயல்பட்டு, அரசியல் லாபத்துக்காக நம் மாணவர்களின் கல்வியைப் பாழாக்க வேண்டாம்!" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு ஜாக்பாட்.! பணியிடங்கள் அதிகரிப்பு : எவ்வளவு தெரியுமா?