மேலும் அறிய

புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட ஆமீர் கான்...ஏன் தெரியுமா ?

தனது மகன் ஜூனைத் கான் நடித்துள்ள லவ்யாப்பா படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடிகர் ஆமீர் கான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளார்

ஆமீர் கான் 

பாலிவுட் திரையுலகில் கடந்த முப்பது ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் ஆமீர் கான். மற்ற பாலிவுட் நடிகர்களைப் போலவே கமர்ஷியல் ரொமாண்டிக் நடிகராக தனது பயணத்தை தொடங்கினாலும் குறிப்பிடத் தகுந்த சில படங்கள் மற்ற நடிகர்களிடம் இருந்து அவரை தனித்து காட்டுகின்றன. லகான் , ரங் தே பசந்தி , தாரே ஜமீன் பர் , கஜினி , 3 இடியட்ஸ் , பி.கே , தங்கல் உள்ளிட்ட படங்கள் ஆமீர் கான் நடிப்பிற்கு சிறந்த உதாரணங்கள். பாலிவுட்டில் வெளியான படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக இன்றுவரை தங்கல் படம் இருந்து வருகிறது. மற்ற நடிகர்கள் வருடத்திற்கு இரண்டு மூன்று என படங்களில் நடித்து வரும் சூழலில் குறைவாக நடித்தாலும் மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 

லவ் டுடே இந்தி ரீமேக்

ஆமீர் கானைத் தொடர்ந்து அவரது மகன் ஜூனைத் கான் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். இந்தியில் அவர் நடித்த மகாராஜ் வெப் சீரிஸ் மக்களிடம் கவனம் பெற்றது. தற்போது தமிழில் வெளியான லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் ஜுனைத் கான் நடித்துள்ளார். இந்தியில் இப்படத்திற்கு லப்யாப்பா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜூனைத் கான் நாயகனாகவும்  மற்றும் ஶ்ரீதேவியின் மகள் குஷி கபூர் இப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்கள். வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது .

புகைப்பிடிப்பதை கைவிடும் ஆமீர் கான்

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஆமீர் கான் தனது மகனின் படம் வெளியாகும் இந்த தருணத்தில் தான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட இருப்பதாக தெரிவித்துள்ளார் " நான் பொய் சொல்ல விரும்பவில்லை ஆனால்  எனக்கு புகை பிடிப்பது ரொம்பவும் பிடிக்கும் என்பது தான் உண்மை. இத்தனை ஆண்டுகளாக நான் புகைபிடித்து வந்திருக்கிறேன். ஆனா இது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது. யாருமே இதை பழகக் கூடாது. இந்த கெட்ட பழக்கத்தை நான் கைவிட்டுவிட்டேன் என்பதை நான் சந்தோஷமாக தெரிவித்துக் கொள்கிறேன். இதை கேட்கும் உங்களிடமும் இந்த பழக்கத்தை கைவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். என் மகனின் படம் வெளியாவது இந்த பழக்கத்தை கைவிட எனக்கு ஒரு நல்ல காரணமாக அமைந்தது. அதனால் அவன் கரியர் சிறப்பாக தொடங்கினாலும் இல்லை என்றாலும் இந்த பழக்கத்தை நான் விட்டுவிட முடிவு செய்திருக்கிறேன். " என ஆமீர் கான் தெரிவித்துள்ளார்

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget