Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி DMK Alliance
ஈவிகேஸ் இளங்கோவனின் மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்குவது யார் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு சட்டமன்ற தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்றார். 2023 ஆம் ஆண்டு திருமகன் ஈவேரா மாரடைப்பு ஏற்பட்டு காலமானதை அடுத்து ஈரோடு தொகுதி காலி தொகுதியாக அறிவிக்கப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். இச்சூழலில் அண்மையில் அவர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்னும் 1 வருடம் 5 மாத ஆட்சிக்காலம் உள்ள நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் போட்டிபோடுவதில் காங்கிரஸ் கட்சியினரிடையே மாறுபட்ட கருத்து உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு புறம் மறைந்த இளங்கோவனனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டி போட விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த முறையே சஞ்சய் சம்பத் போட்டி போட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அவருக்கு பதில் அவர் தந்தைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இச்சூழலில் இம்முறை சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு தர வேண்டும் என ஈரோடு காங்கிரஸ் நிர்வாகிகள் தீர்மானம் போட்டுள்ளனர். இதனால், அவரே காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.
மறுபுறம் ஈரோடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மக்கள் ராஜன் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி வருவதாக கூறப்படுகிறது. கடந்த முறை தன்னை வேட்பாளராக அறிவிக்க வில்லை என்று கண்ணீர் விட்டு அழுதவர் தான் இந்த மக்கள் ராஜன். அப்போது அவரை காங்கிரஸ் கட்சி சமாதானபடுத்தி வேற எதாவது பொறுப்பு தருவதாக கூறியது. ஆனால் அது எதுவும் நடந்த பாடில்லை. இச்சூழலில் தான் தன்னை இந்த முறையாவது வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் ராஜன் காத்திருக்கிறார். ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் யார் களம் இறங்குவது என்ற போட்டி காங்கிரஸ் மற்றும் திமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது தலைமைக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.