சபரிமலை ஐயப்பன் கோயிலில் 29 நாட்களுக்கு மொத்த வருவாய் ரூ.163.89 கோடி
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை உற்சவம், டிச 14ம் தேதி துவங்கியது. 29 நாட்கள் ஆன நிலையில், சபரிமலையில், கடந்த ஆண்டை விட, அதிகளவில் வருவாய் அதிகரித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியுள்ளதை தொடர்ந்து இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கிலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஐயப்பனை தரிசிப்பதற்காக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என ஒரு மண்டலம் எனும் 48 நாள்கள் விரதத்தைக் கடைப்பிடித்து, இருமுடி கட்டி சபரிமலை சன்னிதானத்துக்கு வருவது வழக்கம். மகரவிளக்கு, மண்டலகால பூஜை சீசன் சபரிமலையில் தொடங்கியுள்ளது. ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பக்தர்கள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நடைபெறும் ஐயப்பன் கோயில் சீசனுக்கான 29 நாட்களுக்கு மொத்தம் ரூ.163.89 கோடி. கடந்த ஆண்டு இதே காலத்தில் வருவாய் ரூ.141.13 கோடியாக இருந்தது. இம்முறை கூடுதலாக ரூ.22.76 கோடி கிடைத்துள்ளது. இதில் பெரும் பகுதி அரவணா பிரசாதம் விற்பனையில் இருந்து கிடைத்துள்ளது. 82.68 கோடி மதிப்பிலான அரவணா இந்த முறை விற்பனையானது. அரவணா பிரசாதம் விற்பனை மூலம் கடந்த ஆண்டில் 65.26 கோடி ரூபாய் பெறப்பட்டது.
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
அதாவது சபரிமலையில் இம்முறை மொத்தமாக 22.76 கோடி ரூபாய் அதிகரிப்பில் 17.41 கோடி அரவணை விற்பனையாகும். கடந்த ஆண்டு இதே காலத்தை விட 8.35 கோடி அதிகம். இந்த சீசனில், 29 நாட்களில் 22.67 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடந்த ஆண்டு இதே நேரம் வரை 18.17 லட்சம் பேர் கோயிலுக்கு வந்திருந்தனர். இம்முறை கூடுதலாக 4.51 லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்கு வந்துள்ளனர். செய்தியாளர் சந்திப்பில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அட். பி.எஸ்.பிரசாந்த் புள்ளிவிவரங்களை விளக்கினார்.
கடந்த சீசனைக் காட்டிலும் நான்கு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்தாலும், அனைவரும் குறையின்றி சுகதரிசனம் செய்ய முடிந்தது, இம்முறை ஏற்பாடுகளுக்கு கிடைத்த வெற்றியாகும் என்றார். தேவைக்கேற்ப அரவணா பிரசாதம் வழங்குவது வருமானம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக அமைந்தது. இந்த சீசன் துவக்கத்தில், 40 லட்சம் டின்கள், அரவணா இருப்பு வைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதில் காவல் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார். தங்கயங்கி ஊர்வலம் டிசம்பர் 22ஆம் தேதி காலை 6 மணிக்கு ஆரன்முலாவில் இருந்து புறப்பட்டு 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு சன்னிதானம் சென்றடையும். மாலை 6.30 மணிக்கு தங்கயங்கி சார்த்தி தீபாராதனை நடக்கிறது. டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் போலீசார் மற்றும் தேவசம்போர்டு ஊழியர்கள் இணைந்து கற்பூராட்சி நடத்துகின்றனர்.

