புதுச்சேரியில் எம்.டி.எஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
எம்.டி.எஸ்., நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களிடம் இருந்து அரசு, அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் என்.ஆர்.ஐ., இடங்களுக்கு 3ம் தேதி முதல் வரும் 6ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: பல் மருத்துவம் முதுகலை (எம்.டி.எஸ்.,) படிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பல் மருத்துவம் முதுகலை (எம்.டி.எஸ்.,)
எம்.டி.எஸ் (MDS) என்பது முதுகலை பல் அறுவை சிகிச்சை படிப்பாகும். இது பல் மருத்துவத்தில் ஒரு சிறப்பு படிப்பாகும். மேலும், பல் மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற விரும்புபவர்களுக்கான படிப்பாகும். இது மூன்று வருட கால படிப்பாகும். எம்.டி.எஸ் படிப்பில், மாணவர்கள் பல் மருத்துவத்தின் குறிப்பிட்ட பிரிவுகளில் நிபுணத்துவம் பெறுகிறார்கள். எடுத்துக்காட்டாக, ஆர்த்தோடோன்டிக்ஸ், பீரியடோன்டாலஜி, எண்டோடோன்டிக்ஸ் போன்றவை ஆகும்.
இதுகுறித்து சென்டாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பல் மருத்துவம் முதுகலை (எம்.டி.எஸ்.,) படிப்பில் சேர இந்தாண்டு நடைபெற்ற எம்.டி.எஸ்., நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களிடம் இருந்து அரசு, அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் என்.ஆர்.ஐ., இடங்களுக்கு நேற்று 3ம் தேதி முதல் வரும் 6ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





















