Ayali: வெடிகுண்டு வைக்கச் சொன்ன வர்மா.. ஷாக்கில் கபிலன் - அயலி சீரியலில் அதிரடி
கபிலனை வெடிகுண்டு வைக்க வர்மா சொன்னதால் அதிர்ச்சியில் கபலின் உறைந்த நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபு மனசு சீரியல் அயலி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் இந்திராணி அயலியை சந்திக்க இருந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
குழந்தையை காட்டி தப்பிய அயலி:
அதாவது அயலி இந்திராணியை பார்த்து, இவங்கதான் என்ன கோவில்ல காப்பாத்துனாங்க என்று கை காட்ட இருவருக்கும் இடையேயான முதல் சந்திப்பு நடைபெறுகிறது. என்ன சொல்லி தப்பிப்பது என யோசிக்கும் அயலி குழந்தை, அவங்க அப்பாவ ரொம்ப மிஸ் பண்றா என்று சொல்லி கிளம்புகிறாள்.
இதைத்தொடர்ந்து அயலியை பிக்கப் செய்ய சிவா வருகிறான். அப்போது இவர்களுக்கு விஜயகுமாரிடம் இருந்து செல்போனில் அழைப்பு வருகிறது. இருவரும் விஜயகுமார் வீட்டுக்கச் செல்ல அவர் என்னை இதுவரை யாரும் இப்படி அசிங்கப்படுத்தியது இல்லை என்று சொல்ல, இந்திராணி வீட்டில் நடந்ததை சொல்ல அவங்கள நான் பார்த்துக்கிறேன் என்று அயலி போன் போடுகிறாள்.
அயோக்கியனுக்கு ஆதரவு:
போனில் இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட, அயலி நீங்க ஒரு அயோக்கியனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க என்கிறான். என் குடும்பத்தில் யாரும் அப்படி கிடையாது, என் குடும்பத்தை பத்தி தெரியாம பேசுற என்று பதில் கொடுக்கிறாள்.
அடுத்ததாக வர்மாவின் ஓட்டலில் மூர்த்தி வந்து உட்கார்ந்து இருக்க அவன் வர்மாவை சந்தித்து அந்த ஏ.டி யாருனு கண்டுபிடிக்க முடியல என்று சொல்ல, வர்மா அவள சும்மா விடமாட்டேன் என்று சொல்கிறான்.
இதைத் தொடர்ந்து நிச்சயதார்த்தத்திற்காக வீட்டிற்கு நகைகள் வர அதில் விளைவு உயர்ந்த வைர நெக்லஸ் இருக்க, இலக்கியா இதெல்லாம் கம்பெனி காசுல வாங்குனது தானே, எல்லாருக்கும் பொதுதானே என்று சொல்ல இந்திராணி அமைதியாக இருக்கிறாள்.
வெடிகுண்டு வைக்கச் சொன்ன வர்மா:
இந்திராணியின் அம்மா துளசி, இதெல்லாம் பொது காசில் வாங்கினது இல்ல, அவளுடைய சொந்த பணத்தில் வாங்கியது என்று பதில் அளிக்கிறார். இப்படி இவர்கள் எல்லோருமே பேசிக் கொண்டிருக்க கபிலனுக்கு வர்மாவிடமிருந்து ஃபோன் வர அவன் டக்குன்னு போனை எடுத்துக் கொண்டு நகர்ந்து செல்ல இந்திராணிக்கு சந்தேகம் வருகிறது.
வர்மா போன் காலில் நான் சொல்ற இடத்தில் பாம் வைக்கணும், அதாவது பாம் மாதிரி ஒன்றை வைக்கணும் அத நீ தான் செய்யணும் என்று சொல்ல கபிலன் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















