Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்.
நான் என் சுய மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள்.
என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 16, 2024
இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இசைஞானி இளையராஜா நேற்று முன் தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்றார். இளையராஜா கோவிலுக்குள் வருகை தந்து ஆண்டாள் ரெங்மன்னாரை தரிசனம் செய்ய கருவறைக்குள் நுழைந்தார். அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை கருவறைக்கு வெளியே நிற்குமாறு கூறினார்கள். இதனால் சற்று யோசித்த இளையராஜா சாமி இருக்கும் கருவறையில் இருந்து வெளியே வந்து சாமி தரிசனம் செய்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இளையராஜா கோயிலுக்குள் அவமானப்படுத்தப்பட்டதாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே அர்ச்சகர்கள் தவிர யாரும் கோயில் கருவறைக்குள் செல்ல அனுமதி இல்லை எனவும் காலம்காலமாக இதுதான் கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை எனவும் கோயில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தை ஏற்று அர்த்த மண்டபத்திற்கு முன்பு இருந்து இளையராஜா தரிசித்தார் என்று இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.