நடிகைகளுடன் லேட் நைட் பார்ட்டி.. தனுஷூடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட க்ரித்தி சனோன்.. மீண்டும் சர்ச்சையா?
இயக்குநர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமையுடன் இருக்கும் தனுஷ் நேற்றிரவு நடிகைகளுடன் நைட் பார்ட்டியில் கலந்துகொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது. இப்படம் தெலுங்கில் வெற்றி பெற்றாலும், தமிழில் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. இப்படத்தில் தனுஷ் பிச்சைக்காரர் வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் தனுஷ் அசூரத்தனமான நடித்திருப்பதாக திரை பிரபலங்கள் பலரும் பாராட்டியிருந்தனர். இப்படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்ற நடிகர் சிரஞ்சீவியும் தனுஷை பாராட்டி பேசியிருந்தார்.
பாலிவுட்டில் ஹிட் அடிக்குமா?
ராஞ்சனா படத்தின் மூலம் பாலிவுட்டில் தனுஷ் அறிமுகம் ஆனார். இவர் நடிப்பில் வெளியான முதல் படமே 100 கோடி வசூலை ஈட்டியது. இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆனந்த் எல்.ராயுடன் அட்ராங்கி ரே போன்ற படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே திரை ரசிகர்களுக்கு பிடித்த படமாக உள்ளது. காதலை மையப்படுத்தி உருவாகும் படங்களில் தனுஷ் உயிரை கொடுத்து நடிப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 3வது முறையாக தனுஷ் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் தனுஷ் இப்படத்தின் மூலம் வெற்றிக்கணக்கை தொடர்வாரா என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
நடிகைகளுடன் லேட் நைட் பார்ட்டி
இந்தியில் தனுஷ் Tere Ishq Mein என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அதில் க்ரித்தி சனோன் அவருக்கு ஹீரோயினாக நடிப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், குபேரா படத்தின் வெற்றி விழாவை கொண்டாடும் வகையில் அப்படக்குழுவினர் நைட் பார்ட்டி வைத்துள்ளனர். நேற்று நடந்த இரவு பார்ட்டியில் தனுஷுடன் இந்தி முன்னணி நடிகைகளும் கலந்துகாெண்டது தான் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது. இந்த இரவு பார்ட்டியில் தனுஷூடன் நடிகை க்ரித்தி சனோன், மிருணாள் தாஹூர், தமன்னா, பூமி பட்னேகர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
வைரல் புகைப்படம்
இரவு பார்ட்டியில் நடிகைகளுடன் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தால் இனி தமிழ் படங்களே நடிக்கமாட்டார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. தமிழில் தன்னை சிறந்த நடிகராக நிரூபித்து விட்டார். அதேபோன்று இந்தியிலும் சிறந்த நடிகராக வளர இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் தான் இந்த இரவு பார்ட்டியில் கலந்துகொண்டிருக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.





















