மேலும் அறிய

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு திடீர் தடை - காரணம் என்ன?

பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் தற்போது சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் முகாமிட்டுள்ளன.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளதால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுற்றுலா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஊட்டியும், கொடைக்கானலும் தான். ஊட்டிக்கு அடுத்தபடியாக கொடைக்கானல் மிகப்பெரிய சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. சமவெளிப் பகுதிகளில் கடும் வெயில் நிலவுவதால், கொடைக்கானல் பகுதியில் நிலவும் இதமான சூழலை அனுபவிப்பதற்காக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கிறார்கள். அதிலும் விடுமுறை நாட்களில் கடுமையான கூட்டம் நிலவுகிறது. கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு திடீர் தடை - காரணம் என்ன?

கொடைக்கானலில் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்று பச்சை போர்வை போர்த்தியது போன்றும், காண்போரின் கண்ணை குளிரவைக்கும் வகையிலும் அமைந்துள்ள எழில் கொஞ்சும் இயற்கை அமைப்பை கொண்டதாகும். இதனால், வெளியூர், வெளிமாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக இதமான சீதோசன நிலை காணப்படுகிறது. பகலில் மேகமூட்டமும், இரவில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்த இதமான சூழ்நிலை குளிர்ந்த சீதோஷ்ணத்தையும் ரசித்தபடி வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் சுற்றுலாப் பயணிகல் செல்ல தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு திடீர் தடை - காரணம் என்ன?

பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் தற்போது சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் முகாமிட்டுள்ளன. வனத் துறையினர் யானைகளைக் கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பில்லர் ராக், குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நலன் கருதியே சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத் துறை தெரிவித்துள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Embed widget