Lakshadeepam festival : லட்ச தீபத்தில் ஜொலிக்கும் ஆஞ்சநேயர்! 5 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்...
சித்திரை முதல் நாளான இன்று இன்று ஐந்தாயிரம் லிட்டர் ஆஞ்சநேயருக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.

விழுப்புரம் : பிரசித்தி பெற்ற விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் லட்ச தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான 90 அடி ஆஞ்சநேயருக்கு 5 ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம் இன்று செய்யப்பட்டதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் காமராஜர் வீதியில் அமைந்துள்ள 90 அடி உயரமுள்ள பிரசித்த பெற்ற ஸ்ரீ ஜெயஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆண்டு தோறும் சித்திரை மாதம் 1ம் தேதி பாலாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்தாண்டு சித்திரை முதல்நாளான இன்று இன்று ஐந்தாயிரம் லிட்டர் ஆஞ்சநேயருக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. கோவில் குளக்கறையில் அமைந்துள்ள 90அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 19 வது ஆண்டாக ஐந்தாயிரம் லிட்டர் பாலினை மின் மோட்டார் மூலம் சிலைக்கு அபிஷேகம் செய்தனர்.
பாலாபிஷேகத்தினை முன்னிட்டு பானாம்பட்டு, பிடாகம், வண்டுமேடு, காணை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சார்ந்த கிராம மக்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேய சுவாமிக்கு செய்யப்பட்ட பாலாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை மாதம் முதல் பத்து நாட்கள் ஆஞ்சநேயர் கோவில் லட்ச தீப திருவிழா மற்றும் தெப்ப திருவிழாவும் நடைபெறும். லட்ச தீப திருவிழாவினை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளி கவசம் பொருத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
லட்ச தீபம்
உலகில் எங்கும் நீக்கமற நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் வடிவில் நிறைந்திருக்கிறார் இறைவன். இவற்றுள் நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது. அவ்வாறு ஞானத்தை வழங்கும் வடிவமான இறைவனை விளக்கு என்னும் தீபத்தினை ஏற்றி நாம் வழிபாடு செய்வது சாலச்சிறந்தது ஆகும். இதனையே புராணங்களும் இதிகாசங்களும் வலியுறுத்துகின்றன.
தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான லட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன. தீபமானது வீட்டில் பூஜை அறை, சமையலறை, துளசி மாடம், முற்றம் போன்றவற்றிலும், கோவில்கள், தொழில் நிறுவனங்கள், கல்விகூடங்கள் என எல்லா இடங்களிலும் ஏற்றப்படுகிறது.

