Chennai Power Shutdown: சென்னையில ஜூலை 30-ம் தேதி புதன் கிழமை எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.?
Chennai Power Cut(30-07-2025): சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தற்போது தெரிந்துகொள்ளலாம்.

சென்னையில், மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகளுக்காக, நாளை சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில், அதாவது காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 30-ம் தேதி, அதாவது புதன் கிழமையான நாளை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பெசன்ட் நகர்
ருக்மணி சாலை, கடற்கரை சாலை, அருண்டேல் கடற்கரை சாலை, 7-வது அவென்யூ, 30-வது குறுக்குத் தெரு, எம்ஜிஆர் சாலை, டைகர் வரதாச்சாரி சாலை, முத்துலட்சுமி தெரு, லட்சுமிபுரம்.
சோழிங்கநல்லூர்
200 அடி ரேடியல் சாலை, ராஜம் நகர், விடுதலை நகர், பெரிய கோவிலம்பாக்கம் பகுதிகளில் கோடை காலத்தில் கூடுதல் மின் சுமை காரணமாக ஏற்படும் தேவையற்ற மின் தடைகளைத் தவிர்க்க, 33/11KV தண்டையார்பேட்டை துணை மின் நிலையதில், நாளை காலை 08:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 110KV வடக்கு பேருந்து சுவிட்ச் Y கட்டத்தில் 230KV துணை மின்நிலையத்திற்கு பதிலாக, EE/O/ தண்டையார்பேட்டை துணை மின் நிலையத்தால் மின் விநியோகம் செய்யப்படும். மேலும், 33/11KV தண்டையார்பேட்டை துணை மின்நிலையத்தில் உள்ள 11KV ஃபீடர்களில் வழக்கமான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும்.
இந்த மின் நிறுத்தத்தின் போது, பின்வரும் பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது.
நேதாஜி நகர், நேரு நகர், குமரன் நகர், சிவாஜி நகர், சுந்தரம்பிள்ளை நகர், ஈ.எச்.ரோடு, அன்னை சத்தியா நகர், படேல் நகர், பரமேஸ்வரன் நகர், அஜீஸ் நகர், நாவலர் குவார்ட்டர்ஸ், துர்காதேவி நகர், பேசின் ரோடு, பர்மா காலனி, ராஜீவ்காந்தி நகர், கருணாநிதி நகர், இந்திரகாந்தி நகர், சிஐஎஸ்எஃப் குவார்ட்டர்ஸ், நெடுஞ்செழியன் நகர், வைத்தியநாதன் தெரு, கார்னேஷன் நகர், எழில் நகர், சந்திரசேகர் நகர், கே.எச்.ரோடு, மூப்பனார் நகர், மணலி சாலை, திருவள்ளுவர் நகர், மீனாம்பாள் நகர், அண்ணா நகர், ஜே.ஜே. நகர், சுன்னம்புகால்வாய், வி.ஓ.சி.நகர், கருமாரியம்மன் நகர், மாதா கோயில் தெரு, தியாகப்பசெட்டி தெரு, ஜீவா நகர், காமராஜ் நகர், சுதந்திரபுரம், சிகிரந்தபாளையம், மோட்சபுரம், பாரதி நகர், பாரதி நகர் குவார்ட்டர்ஸ், ரிக்ஷா காலனி, புதிய சாஸ்திரி நகர்.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.





















