மேலும் அறிய
மதுரையில் நாளை மின் தடை! உங்க ஏரியா இருக்கா? அவசர அறிவிப்பு, தெரிஞ்சிக்கோங்க!
Madurai Power Shutdown 30.07.2025 : மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின்தடை
Source : whats app
மதுரை கொட்டாம்பட்டி துணைமின் நிலையம் மாதாந்திர பராமரிப்பு காரணமாக பல இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.
கிழக்கு மின் செயற்பொறியாளர் அறிவிப்பு என்ன
தமிழ்நாடு மின் வாரியத்தின் மதுரை மாவட்டம் கிழக்கு மின் செயற்பொறியாளர் இரா.கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பின்படி, கொட்டாம்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை (30.07.2025) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
மின்விநியோகம் தடைபடும் ஊர்களின் பெயர்கள்:
கொட்டாம்பட்டி, சின்னக் கொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, வெள்வினிப்பட்டி, வி.புதூர், சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, பள்ளப்பட்டி, கருங்காலக்குடி, பாண்டாங்குடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















