மேலும் அறிய

Trump on Tariffs: “இதுக்கு மேல மாத்த மாட்டேன், ஆகஸ்ட் 1 தான் கடைசி“ - ட்ரம்ப் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்திருந்த பரஸ்பர வரிகளுக்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில், அது குறித்து அவர் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர கூடுதல் வரிகளை விதித்த நிலையில், அதை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்தார். அந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு அதை மாற்றி வைத்துள்ளார். அன்று முதல் வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று தெரிவித்த அவர், அதற்குமேல் காலக்கெடுவை நீட்டிக்க மாட்டேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வரி விதிப்பு குறித்து ட்ரம்ப் கூறியத என்ன.?

அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு நாடுகள் தங்கள் மீது அதிகப்படியான வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டினார். அதிலும் குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகள் விதிக்கும் வரி அதிகப்படியாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

அதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிப்பதாக அறிவித்த ட்ரம்ப், ஒவ்வொரு நாட்டிற்குமான வரி எவ்வளவு என்பதை அறிவித்தார். பின்னர், சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கான வரி விதிப்பை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதற்குள், அந்தந்த நாடுகள், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

அவர் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், அந்த வரி விதிப்பை இந்த மாத இறுதி வரை நிறுத்தி வைப்பதாகவும், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வரி விதிப்பு அமலாகும் என்று கூறியுள்ளார் ட்ரம்ப். அதோடு, இந்த முறை காலக்கெடு நீட்டிக்கப்படாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அதோடு, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 25 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அறிவித்த நாடுகடுடன் சேர்த்து, ஜப்பான், தென் கொரியா, மியான்மர், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, வங்க தேசம், செர்பியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய 14 நாடுகளுக்கும் அதிக வரிகளை ட்ரம்ப் விதித்துள்ளார்.

தொடக்கத்திலிருந்து அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டுவரும் ட்ரம்ப்

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின், பல அதிரடிகளை ட்ரம்ப் அரங்கேற்றியதில், இந்த வரி  விதிப்பும் ஒன்று. அதன்படி, பல்வேறு நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிப்பதாக, வரி சதவீதங்களை அறிவித்த ட்ரம்ப், மார்ச் 5-ம் தேதி பேசுகையில், ஏப்ரல் 2-ம் தேதி முதல் வரிகள் விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

பின்னர், ஏப்ரல் 5-ம் தேதி, அனைத்து இறக்குமதிகள் மீதும் 10 சதவீதம் அடிப்படை வரி என்ற அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து, ஏப்ரல் 9-ம் தேதி, ஒரு அறிவிப்பை வெளியிட்ட அவர், ஜூலை 9-ம் தேதி வரை பரஸ்பர வரி விதிப்பை நிறுத்தி வைப்பதாக கூறினார்.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி, 10 - 12 நாடுகளுக்கு வரி விகிதங்கள் குறித்த கடிதம் அனுப்புவது துவங்கும் என்று கூறினார். இந்நிலையில், ஜூலை 7-ம் தேதி, பல நாடுகளுக்கு ஆகஸ்ட் 1-ல் வரி விதிப்பு அமலாகும் என கடிதம் அனுப்பினார்.

இப்படி, ஆரம்பம் முதலே, ஆக்ஷனில் இறங்காமல், அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல்வேறு நாடுகளையும் பதற்றத்திலேயே வைத்திருப்பதற்காக இப்படி செய்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால், அவர் நினைப்பது என்ன என்பது, அவருக்கு மட்டுமே தெரியும்.

 

 

தலைப்பு செய்திகள்

Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget