மேலும் அறிய
RCB In Finals : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்.சி.பி மகளிர் அணி!
RCB In Finals : இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

RCB மகளிர் அணி
1/6

கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கிய மகளிர் ஐ.பி.எல் போட்டிகள் வரும் மார்ச் 17 வரை நடைபெற இருக்கிறது.
2/6

17 ஆம் நடைபெற இருக்கும் இறுதிபோட்டிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏற்கனவே முன்னேறி உள்ள நிலையில் இன்று மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப்போட்டி டெல்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது.
3/6

டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்து 6 விக்கெட்கள் இழப்பிற்கு 136 ரன்களை மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
4/6

அடுத்ததாக களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர்.
5/6

இதனை அடுத்து ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
6/6

17 ஆம் தேதி அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் மேக் லேனிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது.
Published at : 15 Mar 2024 11:19 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement