மேலும் அறிய
IPL 2021: ஐபிஎல் டபுள் டக்கர் போட்டிகள் ; கடைசி நாள் ஆட்டத்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

ஐபிஎல் 2021 கடைசி லீக் போட்டி
1/7

2021 ஐபிஎல் சீசனின் லீக் சுற்று பரபரப்பாக முடிந்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறுவது முன்னதாகவே உறுதி செய்திருந்த நிலையில், நான்காவது இடத்துக்கு கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில் நேற்று இரண்டு லீக் போட்டிகள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது
2/7

துபாய் மைதானத்தில் நடைபெற்ற பெங்களூர் – டெல்லி அணி ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்தது.
3/7

கடினமான இலக்கை சேஸ் செய்த பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட்கோலி, டிவிலியர்ஸ், மேக்ஸ்வேல் ஆகியோருக்கு மத்தியில் புதிய நட்சத்திரமாக அந்த அணிக்கு கே.எஸ். பரத் கிடைத்துள்ளார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 52 பந்தில் 3 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் எடுத்தார்.
4/7

மற்றொரு போட்டியில், மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதின. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்து இமாலய இலக்கை பதிவு செய்தது.
5/7

விக்கெட் கீப்பர் பேட்டரான இஷான் கிஷன், வெறும் 32 பந்துகளில் 84 ரன்கள் அடிக்க, அவரை அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை 200+ எட்ட வைத்தனர். தொடரில்
6/7

தொடரில் இருந்து வெளியேறும் முன்பு "சாவு பயத்த காட்டிட பரமா” என்பதுபோல விளையாடி முடித்தது மும்பை. ஆனால், ஹைதராபாத் அணியும் விட்டுக்கொடுக்கவில்லை டஃப் ஃபைட் தந்த ஆரஞ்ச் ஆர்மி 193 ரன்கள் எடுத்தது. இதனால், 42 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை போட்டியை வென்றது.
7/7

14 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் நான்காவது இடம் பிடித்து கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பெங்களூர் அணி வரும் 11-ந் தேதி ஷார்ஜாவில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் மோத உள்ளது.
Published at : 09 Oct 2021 11:05 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion