பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்னையில் 27 மின்சார ரயில்கள் ரத்து... முழு விவரம் இதோ
Train Cancel: பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே நாளை 27 மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Central to Gummidipundi Trains Cancelled Tommorow: பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை (19-06-2025) 27 மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வரை ரத்தாகும் ரயில்கள் விவரம்
காலை 8:05 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 9:30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 10:30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 11:35 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல்
காலை 9:54 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 11:25 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பகல் 12 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மதியம் 1 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மதியம் 2:30 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மதியம் 3:15 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை
காலை 8:35 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 10:15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பகல் 12:10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மதியம் 1:05 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி
காலை 9:40 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து கும்முடிபூண்டி வரை செல்லும், ரயில் ரத்து செய்யப்படுகிறது.
பகல் 12:40 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து கும்முடிபூண்டி வரை செல்லும், ரயில் ரத்து செய்யப்படுகிறது.
மாலை 3:50 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து கும்முடிபூண்டி வரை செல்லும், ரயில் ரத்து செய்யப்படுகிறது.
பகுதி நேரமாக ரத்து செய்யப்படும் ரயில்
செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் காலை 9: 55 மணி ரயில், சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரம் வரை மாலை 3 மணிக்கு செல்லும் ரயில் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்.
சிறப்பு ரயில்கள்
ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் அதற்கேற்றவாறு பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. இதேபோன்று ரயில்கள் ரத்து செய்யப்படும் நிலையில் சென்ட்ரலில் இருந்து மீஞ்சூர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோன்று சென்னை கடற்கரை மற்றும் மீஞ்சூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.





















