தனுஷிடம் இருந்து சிம்புவுக்கு கைமாறிய வடசென்னை 2...?போஸ்டர் வெளியிட்டு கொண்டாடும் ஃபேன்ஸ்
Vada Chennai 2 : வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு தற்போது நடித்து வருவது தனுஷ் நடிக்க இருக்க ராஜன் வகையறா படம் என தகவல்கள் வெளியாகியுள்ளன

வெற்றிமாறன் சிம்பு கூட்டணி
தக் லைஃப் படத்தைத் தொடர்ந்து சிம்பு வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டது. ஆண்டிரியா , சமுத்திரகனி , நெல்சன் , கவின் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலுல் இந்த படம் வடசென்னை கதையுலகத்தின் ஒரு பாகமாக உருவாக இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உற்சாகமடைந்த சிம்பு ரசிகர்கள் ஏற்கனவே படத்தின் போஸ்டர்களை உருவாக்கி சமூக வலைதளத்தில் வெளியிட தொடங்கிவிட்டார்கள். இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
#SilambarasanTR - #VetriMaaran film will be happening under #VadaChennai Universe ✅🔥#STR will be portraying a character which is part of RajanVagaigara🔪
— AmuthaBharathi (@CinemaWithAB) June 17, 2025
So, in #VadaChannai2, we can expect #STR & #Dhanush in a single film🥵❤️🔥 pic.twitter.com/7axIVAuMKB
வடசென்னை 2
வடசென்னை படத்தைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் வெவ்வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்த டேனியல் பாலாஜி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வடசென்னை படத்தைத் தொடர்ந்து தனுஷின் கதாபாத்திரமான அன்பை மையமாக வைத்து 'ராஜன் வகையறா' படம் உருவாக இருந்தது. சிம்பு தற்போது நடித்து வரும் படம் இந்த படத்தின் கதையாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது
#SilambarasanTR is set to star in a film by #VetriMaaran, all happening within the #VadaChennai Universe! ✅🔥
— Prince lina (@Princelina96) June 18, 2025
In this project, #STR will take on a role linked to RajanVagaigara! 🔪✨ pic.twitter.com/QVlNJCpKjZ





















