மேலும் அறிய

Gold Rate 18th June: இப்படி ஏமாத்திட்டியே.?! குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம் - இன்றைய விலை என்ன தெரியுமா.?

கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, இன்று மீண்டும் ஏறுமுகத்திற்கு திரும்பியுள்ளது, பொதுமக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. இன்றைய விலை என்ன தெரியுமா.?

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் கணிசமாக குறைந்தது. இதனால், தங்கத்தின் விலை தொடர்ந்து குறையும் என பொதுமக்கள் எண்ணியிருந்த நிலையில், இன்று விலை அதிகரித்துள்ளது. தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இன்று சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை

தங்கத்தின் விலை, கடந்த 10-ம் தேதி, கிராம் 8,945 ரூபாயாகவும், சவரன் 71,560 ரூபாயாகவும் விற்பனையானது. தொடர்ந்து, 11-ம் தேதி கிராம் 9,020 ரூபாயாக அதிகரித்த நிலையில், சவரன் 72 ஆயிரத்தை கடந்து ஒரு சவரன் 72,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

12-ம் தேதியும் விலை உயர்ந்து, கிராம் 9,100 ரூபாயாகவும், சவரன் 72,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 13-ம் தேதி கிராமிற்கு அதிரடியாக 195 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 9,295 ரூபாயாகவும், ஒரு சவரன் 74,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இதையடுத்து, 14-ம் தேதியும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 9,320 ரூபாயாகவும், ஒரு சவரன் 74,560 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. 15-ம் தேதி அதே விலையில் நீடித்த தங்கம், 16-ம் தேதி விலை குறையத் தொடங்கியது.

அதன்படி, கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து, ஒரு கிரராம் 9,305 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 குறைந்து ஒரு சவரன் 74,440 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 840 ரூபாய் குறைந்தது தங்கத்தின் விலை.

அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை 105 ரூபாய் குறைந்து, கிராம் 9,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு சவரனுக்கு 840 ரூபாய் விலை குறைந்து, சவரன் 73,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது.

அதன்படி, கிராம் ஒன்றிற்கு 50 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 9,250 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் சரியாக 74,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை 2 நாட்கள் குறைந்த நிலையில், தொடர்ந்து குறையும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இன்று விலை உயர்ந்துள்ளதால், வரும் நாட்களில் மேலும் உயருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், தங்கம் வாங்குவோர் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

வெள்ளியின் விலையும் ரூ.2 உயர்வு

தங்கத்தை போலவே, வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. கடந்த 10-ம் தேதி 119 ரூபாயாக இருந்த வெள்ளியின் விலை, 12-ம் தேதி வரை அதே விலையில் நீடித்தது. அதன்பின்னர், 13-ம் தேதி கிராமிற்கு ஒரு ரூபாய் விலை உயர்ந்து, 120 ரூபாய் என்ற உச்ச விலையை அடைந்தது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையானது.

அதைத் தொடர்ந்து, நேற்று வரை கிராமிற்கு 120 ரூபாய் என் அதே விலையில் நீடித்த நிலையில், இன்று கிராமிற்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் 122 ரூபாய் உன்ற உச்ச விலையை அடைந்துள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! தினந்தோறும் உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! தினந்தோறும் உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
Embed widget