Watch Video: அசராமல் அடிக்கும் ஈரான்; ஒரு மணி நேரத்தில் 20 ட்ரோன்களை மறித்த இஸ்ரேல் - எச்சரித்த நெதன்யாகு
இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஈரானுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இன்றும் இஸ்ரேல் மீது ட்ரோன் மழையை பொழிந்துள்ளது ஈரான், ஒரு மணி நேரத்தில் 20 ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக கூறியுள்ள இஸ்ரேல் ராணுவம், வீடியோவும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இடைமறிக்கப்பட்ட ஈரான் ட்ரோன்கள்
கடந்த வெள்ளிக் கிழமையன்று, ஈரானின் அணுசக்தி மையங்கள், ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரானின் ராணுவ தளபதி உள்ளிட்ட முக்கிய ராணுவ அதிகாரிகள், அணு விஞ்ஞானிகள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஈரான் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி பதில் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் பதிலுக்கு பதில் என தாக்குதலை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
ஏற்கனவே இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் எச்சரிக்கை விடுத்த நிலையில், இன்றும் இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். ஏற்கனவே நேற்று நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலில், குழந்தைகள் உட்பட 10 பேர் பலியான நிலையில், இதுவரை மொத்தமாக 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று மாலை மீண்டும் இஸ்ரேலை ட்ரோன்கள் மூலம் தாக்கியுள்ளது ஈரான். இது குறித்து இஸ்ரேல் விமானப்படை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஒரு மணி நேரத்தில் 20 ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது.
חיל-האוויר יירט בשעה האחרונה כ-20 כלי טיס בלתי מאוישים ששוגרו לעבר שטח הארץ pic.twitter.com/3FJU8rFto2
— Israeli Air Force (@IAFsite) June 15, 2025
ஈரானை கடுமையாக எச்சரித்த நெதன்யாகு
இதனிடையே, தாக்குதலுக்கு உள்ளான டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் பொதுமக்களை, குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான், அதற்காக மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல், ஈரான்
ஒரு புறம் எச்சரிக்கை, மறுபுறம் தாக்குதல் என, இரு நாடுகளும் விடாப்பிடியாக போரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதோடு, பரஸ்பரம் குற்றம்சாட்டியும் வருகின்றன. ஈரான் அணு ஆயுத தயாரிப்பை கைவிட வேண்டும் என அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு இஸ்ரேல் கூறி வருகிறது. அதற்காகத் தான் தாக்குதல் நடத்துகிறோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.
இன்னொரு பக்கம், இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் தான் தாக்ங்கள் தற்காப்புக்காக பதில் தாக்குதல் நடத்துகிறோம் என ஈரான் தெரிவித்துள்ளது. அதோடு, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படும் நிலை உள்ளதாகவும், அதை சிதைக்கவே இஸ்ரேல் இவ்வாறு தாக்குதல் நடத்தி வருகிறது என ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், ஈரான் இன்று மாலையிலும் தாக்குதல் நடத்தியுள்ளது. எப்படியும் இஸ்ரேல் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று இரவு தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியே போனால், போர் எப்போது ஓய்வுது.?





















