MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள சூழலில் திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி பாஜக உடன் கூட்டணிக்கு வரும் என்று எல்.முருகன் கூறியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், அது எந்த கட்சி என்ற் கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தமிழக கட்சிகள் இப்போதே தீவிர படித்தியுள்ளன. அந்த வகையில் ஆளும் திமுக காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியிடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்றும் தங்களது கூட்டணி வலுவாக உள்ளது என்றும் கூறி வருகிறது. அதேபோல், மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து அதிமுக தேர்தலை சந்திக உள்ளது. மறுபுறம் தேமுதிக, பாமக, விஜயின் தவெக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.
அதிமுக கூட்டணியை திருமாவளவன் தொடர்ந்து விமர்சனம் செய்தௌ வரும் சூழலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையாய் இருக்கும் இபிஎஸ் எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல்வேறு கட்சிகள் வரும் என்று கூறிவருகிறார். அதற்கேற்றார் போல் கடந்த சில நாட்களாக திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி மற்றும் விசிக அதிக சீட் கேட்டு திமுகவிற்கு நெருக்கடியை ஏற்ப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தான் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் DMK கூட்டணி விரைவில் உடையும் என்றும் திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி பாஜக கூட்டணிக்கு வர தயாராக உள்ளது என்று கூறியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. இதே கருத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் பதிவு செய்துள்ளார். கடந்த காலங்களில் பாஜக உடன் கூட்டணி வைத்த மதிமுக தான் இணைய இருப்பதாக சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். முன்னதாக திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.





















