மேலும் அறிய
IND vs NZ, 1st Test: முதல் இன்னிங்ஸில் அசத்திய இந்திய அணி, 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 63 ரன்கள் முன்னிலை

அக்சர் - அஷ்வின் - பரத்
1/7

மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் நியூசிலாந்து தனது முதல் விக்கெட்டை இழந்தது. அஷ்வின் பந்துவீச்சில் அதிரடி ஓப்பனர் யங் 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார்.
2/7

அவரை அடுத்து களமிறங்கிய ராஸ் டேலரை பெவிலியனுக்கு அனுப்பினார் அக்சர் பட்டேல். இந்த டெஸ்ட் போட்டியில் இதுதான் அவருக்கு முதல் விக்கெட். அதனை அடுத்து, ஹென்ரி நிக்கோல்ஸ், 95 ரன்கள் எடுத்து சதம் கடக்க இருந்த அதிரடி ஓப்பனர் லாதம், டாம் ப்ளண்டெல், டிம் சவுதி என அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அக்சர் பட்டேல்.
3/7

அதனை தொடர்ந்து டெயில் எண்டர்களாக களமிறங்கிய ஜேமிசன், வில்லியம் சோமர்வில்லின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஷ்வின்.
4/7

இதனால், 10 விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறது நியூசிலாந்து. இதனால் இந்திய அணியைவிட 49 ரன்கள் பின் தங்கியுள்ளது.
5/7

இன்றைய போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் 5 முறை 5 விக்கெட்டுகள் எடுத்த பவுலர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார் அக்சர். அதவாது அக்சர் விளையாடியுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில், 5 முறை 5 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.
6/7

இந்திய அணி பவுலர்களைப் பொருத்தவரை, அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கின்றனர்.
7/7

இன்றைய ஆட்ட நேர முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருக்கிறது இந்திய அணி. இதனால் 63 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது இந்திய அணி.
Published at : 27 Nov 2021 08:36 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement