மேலும் அறிய
Nungu Kulfi : அடிக்கிற வெயிலை சமாளிக்க நுங்கு குல்ஃபி சாப்பிடுங்க!
Nungu Kulfi Recipe : கோடை காலத்தில் கிடைக்கும் அற்புதமான நுங்கை வைத்து பல விதமான உணவுகளை செய்யலாம்.

நுங்கு குல்ஃபி
1/6

தேவையான பொருட்கள்: நுங்கு - 8 , காய்ச்சிய பால் - 2 டம்ளர், சர்க்கரை- 1/2 கப், சோள மாவு- 1 டீஸ்பூன், ஐஸ் குச்சிகள்- 8, நுங்கு துண்டுகள் - 4 டீஸ்பூன்
2/6

செய்முறை: நுங்கின் தோலை நீக்கி சுத்தம் செய்து சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
3/6

அடுத்தது மிக்ஸியில் நுங்கு, சர்க்கரை சேர்த்து அரைக்கவும். அதன் பின் அதில் காய்ச்சிய பால் ஊற்றி அரைக்கவும்.
4/6

அடுத்தது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து மிதமான சூட்டில் அரைத்து வைத்துள்ள நுங்கு பாலை ஊற்றி கொதிக்க விடவும். அதன் பின் சோளமாவை பாலில் கரைத்து நுங்கு பாலுடன் சேர்த்து கிளறவும்.
5/6

அதன்பின் நுங்கு பால் கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிடவும். அடுத்தது ஒரு டம்ளரில் நுங்கு துண்டுகள் போட்டு நுங்கு பாலை ஊற்றி ஐஸ் குச்சிகளை பொருத்தவும்
6/6

அந்த டம்ளரை ஃபிரீசரில் 8 மணி நேரம் வைக்கவும். அதன் பின் டம்ளரில் இருந்து நுங்கு குல்ஃபியை எடுத்து சாப்பிடலாம்.
Published at : 23 May 2024 11:28 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion