கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Koyambedu to Kerala Coimbatore Bus Timings: சென்னை கோயம்பேட்டில் இருந்து வாரத்திற்கு நான்கு நாட்கள் கேராளவிற்கும் மூன்று நாட்கள் கோவைக்கும் அரசு விரைப்பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூருக்கு அருகில் புதிய புறநகர் பேருந்து நிலையமானது கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு 2023 ஆம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டத்ய். இதன் காரணமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகள் கிளம்பாக்கத்தில் இருந்து இயங்கி வருகிறது. இதனால் தாம்பரம் மக்கள் சுலபமாக வந்து சென்றாலும் வட சென்னை திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் நீண்ட நேரம் பயணம் செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடைய வேண்டிய நிலை தற்போது உள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையம்:
சென்னையின் முக்கிய பேருந்து நிலையமாக கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வருகைக்கு பிறகு பயணிகள் கூட்டமின்றி குறைந்து காணப்படுகிறது, தற்போது இங்கிருந்து பெங்களூர், ஓசூர், தர்மபுரி, வேலூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கும் ஈசிஆர் மார்க்கமாக வேளாங்கன்னி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கடலூர், புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
கோவை கேரளாவுக்கு பேருந்துகள்:
ஆவடி, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் இருந்து தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது, ஆனால் கோவை மற்றும் சேலத்திற்கு பேருந்துகள் இல்லாத சூழல் உள்ளது. இதனால் சென்னை கோயம்பேட்டிலிருந்து கேரளா மாநிலம் திருச்சூருக்கு வாரத்தில் நான்கு நாட்களுக்கு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து வியாழன் முதல் வெள்ளி வரையிலும், திருச்சூரில் இருந்து சென்னைக்கு வெள்ளி முதல் திங்கள் வரையிலும் இந்த பேருந்தானது இயக்கப்படுகிறது.
இதே போல கோவைக்கு வார இறுதி நாட்களில் ஏசி வசதிக்கொண்ட இருக்கை மற்றும் படுக்கை வசதிக்கொண்ட பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமை ஆகிய நாட்களில் இரு மார்க்கங்களில் இயக்கப்படுகிறது. இதில் கட்டணமாக இருக்கைக்கு 707 ரூபாயும், படுக்கைக்கு 1087- ரூ கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தடம் எண் | வழி | புறப்படும் நேரம் |
787 UD - சென்னை கோயம்பேடு -திருச்சூர் கட்டணம்: ரூ 710 |
பூந்தமல்லி, வேலூர், சேலம், கோவை, பாலக்காடு | மாலை-05.30 மணி |
460 ACSS - சென்னை கோயம்பேடு - கோயம்புத்தூர் கட்டணம்: ரூ 707/1087 |
பூந்தமல்லி, வேலூர், சேலம் | மாலை- 06.30 மணி |
இந்த பேருந்துகளுக்கான முன்பதிவை https://www.tnstc.in/OTRSOnline/ என்கிற இணையதளம் மூலமும் TNSTC மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

