"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
100 பேர் அல்ல ஆயிரக்கணக்கானோர் உயிரையும் கொடுத்து தமிழைக் காக்கத் தயாராக இருப்பதாக தமிழக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்களையும், தமிழ்நாடு அரசையும் மிரட்டி ஒருபோதும் பணிய வைக்க முடியாது என தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பேசியுள்ளார்.
மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி ஒதுக்காத மத்திய பாஜக அரசை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜகவை பொளந்து கட்டிய உதயநிதி:
இதில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி, மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செல்வப்பெருந்தகை, விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி, பாஜக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். "நாங்க ஒன்னும் உங்க அப்பன் வீட்டு காச கேட்கல. பிச்சையோ, கடனோ கேட்கல. தமிழ்நாட்டு மாணவர்களின் பெற்றோர்கள் கட்டிய வரிப் பணத்தைதான் கேட்கிறோம். எங்களுடைய நிதியை உரிமையோடு கேட்கிறோம்.
"இது பெரியார் மண்"
மற்ற மாநிலங்களைப் போல மும்மொழி கொள்கையை ஏற்று இந்தியை ஏற்றால், நாம் தாய்மொழி தமிழை இழந்துவிடுவோம். தமிழ்நாட்டு மக்களையும், தமிழ்நாடு அரசையும் மிரட்டி ஒருபோதும் பணிய வைக்க முடியாது. இது திராவிட மண். பெரியார் மண். இது சுயமரியாதை மண்.
100 பேர் அல்ல ஆயிரக்கணக்கானோர் உயிரையும் கொடுத்து தமிழைக் காக்கத் தயாராக இருக்கிறோம். உரிமைகளைக் காக்க உயிரையும் விட தயாராகவே உள்ளோம். அண்ணா பெயரை வைத்துக்கொண்டு ஒதுங்கி நிற்காதீர்கள். எங்களோடு வீதிக்கு வாருங்கள். இது திமுகவுக்கான பிரச்னை கிடையாது. மாணவர்களுக்கான போராட்டம். தமிழுக்கான போராட்டம்.
தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரை சந்திக்கவும் தயங்காது. இந்த ஆர்ப்பாட்டம் வெறும் தொடக்கம்தான். விரைவில் தமிழ்நாடு முழுக்க போராட்டமாக மாறும்" என உதயநிதி பேசியுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை, "மும்மொழி கொள்கை கொண்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் தமிழ்நாட்டில் உள்ள ஓட்டல்கள், கட்டிட வேலைகளை பார்க்கிறார்கள் என்பதனை மறந்துவிடாதீர்கள்" என்றார்.
இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

