18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 498.80 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 498.80 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஓரிரு நாட்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு நிதி வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நிவாரண நிதியால் 5,18,783 விவசாயிகள் பயன்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு பணம் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் “மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500 வழங்கப்படும். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட நீண்டகால பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22,500 நிவாரணம் வழங்கப்படும். நெற்பயிர் பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ஹெக்டேர் ஓன்றுக்கு ரூ.17,000 வழங்கப்படும்” என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

