மேலும் அறிய
Orange Ice Cream:ஹெல்தியான ஆரஞ்சுப் பழ ஐஸ்க்ரீம் வீட்டிலேயே செய்யலாம் - ரெசிபி!
Orange Ice Cream:கெமிக்கல் இல்லாத சுவையான ஆரஞ்சு ஐஸ் க்ரீம் எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம். தித்திக்கும் ஆரஞ்சு பழம் இருந்தால் போதுமானது.

ஆரஞ்சு ஐஸ் க்ரீம்
1/4

ஒரு முழு ஆரஞ்சை எடுத்து அதன் மேல் பகுதியை மட்டும் கேப் போன்று வெட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சதை பகுதியை மட்டும் ஸ்பூன் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2/4

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் அரை லிட்டர் கொழுப்பு நிறைந்த பால் சேர்த்து 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கடாயின் ஓரங்களில் பிடிக்கும் ஏடுகளை கரண்டியால் எடுத்து பாலிலேயே மீண்டும் சேர்த்து விட வேண்டும். க்ரீம் பதம் வந்ததும் இதனுடன் பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு சிறிது, அரை ஸ்பூன் பாலாடை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்
3/4

ஆரஞ்சின் சதை பகுதியில் இருந்து விதைகளை நீக்கி விட்டு, அதன் ஜூசை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த ஜூசை நாம் க்ரீம் போல் தயாரித்து வைத்துள்ள பாலில் சேர்த்து கரண்டியால் கலந்து விட்டு,
4/4

நாம் வெட்டி எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு தோலின் மேல் பகுதியை கொண்டு இதை மூடிக் கொள்ள வேண்டும். இதை இரண்டரை மணி நேரம் ஃப்ரீசருக்குள் வைத்து பின்பு வெளியே எடுத்து பரிமாறலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
Published at : 30 May 2024 07:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion