IPL 2025 LSG vs PBKS: பட்டையை கிளப்புமா பஞ்சாப்? ரன் வேட்டை நடத்துவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 PBKS vs LSG: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

IPL 2025 LSG vs PBKS: ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி லக்னோவில் உள்ள வாஜ்பா் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இரண்டு போட்டிகளில் ஆடி 1 போட்டியில் 1ல் வெற்றியும், 1ல் தோல்வியும் அடைந்துள்ள லக்னோ அணி அடுத்த வெற்றிக்காகவும், முதல் போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி தனது வெற்றியைத் தொடரவும் இந்த போட்டியில் களமிறங்குகின்றன.
இந்த போட்டியில் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் டாஸ் வென்றார். அவர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
ப்ளேயிங் லெவன்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் கேப்டன் ரிஷப்பண்ட் தலைமையில் மார்ஷ், மார்க்ரம், நிகோலஸ் பூரண், ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், திக்வேஷ் சிங் ரதி, ஷர்துல் தாக்கூர், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் இடம்பிடித்துள்ளனர்.
பஞ்சாப் அணியில் பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷஷாங்க் சிங், ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல், சூர்யான்ஷ் ஷெக்டே, ஜான்சன், பெர்குசன், சாஹல், அர்ஷ்தீப்சிங் ஆகியோர் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கியுள்ளனர்.
பேட்டிங், பவுலிங் மல்லுகட்டு:
பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை ஸ்ரேயாஸ் ஐயர், பிரப்சிம்ரன், பிரியன்ஷ் ஆர்யா, ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல், ஜான்சன் பேட்டிங்கில் வல்லமை பெற்றவர்கள். இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் பஞ்சாப் மிகப்பெரிய இலக்கையும் எட்டிப்பிடிக்கும்.
லக்னோ அணியைப் பொறுத்தவரை மார்ஷ், மார்க்ரம், பூரண், கேப்டன் பண்ட், பதோனி, மில்லர், சமத் அதிரடி காட்ட வேண்டியது அவசியம். பலம் மிகுந்த பஞ்சாப்பிற்கு எதிராக அவர்கள் அதிரடியாக ஆடினால் மட்டுமே மிகப்பெரிய இலக்கை எட்ட முடியும்.
சவால்:
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் லக்னோ அணியில் பிரின்ஸ் யாதவ் இம்பேக்ட் வீரராக களமிறங்குவார். ஆவேஷ்கான், பிஷ்னோய், ஷர்துல் தாக்கூர் சிறப்பாக வீசி பஞ்சாப்பை கட்டுப்படுத்த வேண்டும். பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப்சிங், சாஹல், பெர்குசன், ஜான்சென், ஸ்டோய்னிஸ் சிறப்பாக பந்துவீசும் வல்லமை கொண்டவர்கள். இந்த போட்டி மிகவும் சவால் மிகுந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















