மேலும் அறிய

Gold Rate Shocks: பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை.. சவரன் ரூ.68,000-ஐ கடந்தது...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 68,000 ரூபாயை கடந்து புதிய வரலாற்று உச்ச விலையை எட்டியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 68,000 ரூபாயை கடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புதிய வரலாற்று உச்ச விலையை எட்டிய தங்கம்

தங்கத்தின் விலை தொடர்ந்து பல புதிய உச்ச விலையை எட்டி வருகிறது. கடந்த 26-ம் தேதி ஏறுமுகத்திற்கு மாறிய தங்கத்தின் விலை, அன்றைய தினத்தில் கிராமிற்கு 10 ரூபாய் உயர்ந்து, 8,195 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 65,560 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 27-ம் தேதி கிராமிற்கு 40 ரூபாய் உயர்ந்த தங்கம், ஒரு கிராம் 8,235 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 65,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

28-ம் தேதி ஒரே நாளில் கிராமிற்கு 105 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் விலை புதிய உச்சமாக 8,340 ரூபாயை தொட்டது. அதன்படி, சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் வரலாற்று உச்சமாக, 66,720 ரூபாயை எட்டியது.

இந்நிலையில், அதையும் கடந்து, 29-ம் தேதி புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது. அதன்படி, தங்கம் விலை ஒரு கிராமிற்கு 20 ரூபாய் உயர்ந்து, புதிய உச்சமாக 8,360 ரூபாயை எட்டியது. ஒரு சவரன் தங்கம் 160 ரூபாய் உயர்ந்து, புதிய வரலாற்று உச்சமாக 66,880 ரூபாயை எட்டியது.

தொடர்ந்து, 30-ம் தேதி அதே விலையில் நீடித்த தங்கத்தின் விலை, நேற்று 67,000 ரூபாயை கடந்து புதிய உச்சத்தை அடைந்தது. அதன்படி, ஒரு கிராமிற்கு 65 ரூபாய் உயர்ந்து, 8,425 ரூபாய் என்ற புதிய உச்ச விலையை எட்டியது. ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, 67,400 என்ற புதிய வரலாற்று உச்ச விலையை தங்கம் அடைந்தது.

நேற்று மாலையே மீண்டும் கிராமிற்கு 25 ரூபாயும், சவரனுக்கு 200 ரூபாயும் உயர்ந்த தங்கம் விலை, ஒரு கிராம் 8,450 ரூபாயாகவும், சவரன் 67,600 ரூபாய் என்ற புதிய உச்சத்தை அடைந்தது.

இந்த நிலையில், இன்று கிராமிற்கு 60 ரூபாய் உயர்ந்து 8,510 என்ற புதிய உச்சத்திலும், சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 68,080 என்ற புதிய உச்ச விலையிலும் தங்கம் விற்பனையாகிறது.

ஒரு ரூபாய் உயர்ந்த வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையை பொறுத்தவரை, கடந்த 28-ம் தேதி கிராமிற்கு 3 ரூபாய் உயர்ந்து 114 என்ற உச்ச விலையை எட்டியது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயை அடைந்தது. ஆனால், மறுநாளான 29-ம் தேதி ஒரு ரூபாய் குறைந்து, கிராம் 113 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாது. இதைத் தொடர்ந்து, நேற்று வரை அதே விலையில் நீடித்து வந்தது.

இந்நிலையில், இன்று வெள்ளியின் விலை கிராமிற்கு ஒரு ரூபாய் உயர்ந்து, கிராம் 114 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது.

தங்கம் வாங்குவது எட்டாக் கனியாகிவிடும் என்று மக்கள் பயந்தபடியே, வரலாற்றில் இல்லாத புதிய உச்ச விலையை தங்கம் இன்று எட்டியுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
Gold and silver rate today : திடீரென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய விலை நிலவரம் இதோ..
திடீரென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய விலை நிலவரம் இதோ..
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
Embed widget