karthigai deepam: பரமேஸ்வரியால் சாமுண்டீஸ்வரி ஷாக்! முருகனுக்கு நன்றி சொன்ன பாட்டி - கார்த்திகை தீபத்தில் இன்று
karthigai deepam serial: கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதிக்கும் கார்த்திக்கிற்கும் திருமணம் நடந்த நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரேவதி திருமணம் நடந்து முடிந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
உண்மையை உளறிய பரமேஸ்வரி:
அதாவது, மாயா சந்திரகலா சிவனாண்டி ஆகியோர் எவ்வளவோ முயற்சி பண்ணியும் இந்த கல்யாணம் நடந்திடுச்சு என்று வருத்தம் அடைகின்றனர்.
இதைத்தொடர்ந்து பரமேஸ்வரி பாட்டி என் பேரனுக்கு உன் பொண்ண கட்டி வச்சுக்கோ என்று சொல்ல, சாமுண்டீஸ்வரி யார் உங்க பேர என்று கேட்க கல்யாணம் ஆன பிறகு அவனும் என் பேர மாதிரி தானே என்று சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறார்.
முருகனுக்கு நன்றி:
அடுத்ததாக கோவிலுக்கு வந்த பரமேஸ்வரி பாட்டி தேங்காய் உடைத்து முருகனுக்கு நன்றி செய்கிறார். அங்கே வந்த அபிராமி கல்யாண கோலத்தில் அவங்க ரெண்டு பேரையும் பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று தனது ஆசையை சொல்கிறாள்.
இந்த சமயத்தில் கார்த்திக், ரேவதி, ரோகிணி ஆகியோர் கோவிலுக்கு வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















