Dhoni Retirement: ஓய்வு பெறுகிறாரா தோனி? பாதியிலே ஐபிஎல்-க்கு பை பை சொல்கிறாரா?
dhoni retirement: நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தாெடரின் பாதியில் இருந்தே தோனி ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகி சென்னை ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

dhoni retirement: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 18வது சீசனான இந்த சீசனில் ஒவ்வொரு அணியும் பலமிகுந்த அணிகளாக களமிறங்கியுள்ளன. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6வது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கியுள்ளது.
தோனி ஓய்வா?
சென்னை அணி அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள நிலையில் தோனி ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சென்னை தனது முதல் போட்டியில் மும்பையை வென்றாலும், அடுத்த இரண்டு போட்டியிலும் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது. இந்த தோல்வி சென்னை அணி மீது ஏராளமான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. குறிப்பாக, ஆர்சிபி அணி நிர்ணயித்த 197 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங் செய்த விதம் சென்னை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தோனியின் பேட்டிங் ஆர்டர்:
மேலும், சென்னை அணி தத்தளித்துக் கொண்டிருந்தபோது தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் அஸ்வின் களமிறங்கியது தோனிக்கு எதிராக கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. இதன்காரணமாகவே, ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஜடேஜாவிற்கு அடுத்ததாக களமிறங்கினார்.
தோனியின் உடல்தகுதி:
அணியின் நலன் கருதி தோனி ஆர்சிபி போட்டியில் முன்கூட்டியே இறங்காதது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங் அளித்த பேட்டியில் தோனியின் முட்டியில் உள்ள பிரச்சினை காரணமாக அவரால் 10 ஓவர் வரை பேட்டிங் செய்ய இயலாது என்று கூறியுள்ளார். ப்ளெமிங்கின் இந்த போட்டி தோனியின் உடற்தகுதி மீது பெரும் கேள்வியையும், சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
உண்மையில் ஓய்வு பெறுகிறாரா?
இதனால், தோனி ஐபிஎல் தொடரில் இருந்து நடப்பு ஐபிஎல் தொடரில் பாதியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்ற தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், தோனி உண்மையில் ஓய்வு பெறுவது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. மேலும், தோனி இந்த சீசனின் பாதியில் இருந்தே சென்னை அணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு வாய்ப்புகள் துளியளவும் இல்லை என்பதே உண்மை.
அவர் கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 6வது விக்கெட்டிற்கு களமிறங்கினார். அந்த போட்டியில் அவர் 11 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 16 ரன்கள் எடுத்தார். மேலும், ஆர்சிபி போட்டியிலும் அவர் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.
இதனால், இனி வரும் போட்டிகளில் தோனி தொடர்ந்து 6வது விக்கெட்டிற்கு களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனியால் முன்பு போல ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க முடியாவிட்டாலும் இனி வரும் நாட்களில் ஃபினிஷர் ரோலில் சிறப்பாக ஆட முயற்சிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

